‘வில்லி’ ஆனார் தமன்னா

முன்­னணி கதா­நா­ய­கி­கள் முதல் அண்­மை­யில் அறி­மு­க­மான இளம் நாய­கி­கள் வரை அனை­வ­ருமே இணை­யத் தொட­ரில் நடிக்க ஆர்­வம் காட்டி வரு­கி­றார்­கள். தமன்­னா­வும் இந்­தப் பட்­டி­ய­லில் இணைந்­துள்­ளார்.

'நவம்­பர் ஸ்டோரி' என்ற தொட­ரில் முதன்­மு­றை­யாக வில்லி வேடத்­தில் நடித்­தி­ருக்­கி­றா­ராம். தைரி­ய­மான பெண் என்று பெய­ரெ­டுத்த தம்மை கொரோனா விவ­கா­ரம் தலை­கீ­ழாக மாற்­றி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார் தமன்னா. இப்­போ­தெல்­லாம் வீட்­டை­விட்டு வெளியே செல்­லவே அச்­ச­மாக உள்­ளது என்­கி­றார்.

தமன்னா நடிப்­பில் கடை­சி­யாக வெளி­வந்த இரண்டு படங்­கள் 'பெட்­ரோ­மாக்ஸ்', 'ஆக்­‌ஷன்'. அதன்­பி­றகு இணை­யத் தொடர்­களில் நடிப்­ப­தில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

இவ­ரது நடிப்­பில் 'லெவந்த் ஹவர்' என்ற தொடர் தெலுங்­கில் உரு­வாகி உள்­ளது. அதை அடுத்து 'நவம்­பர் ஸ்டோரி' என்ற நேரடி தமிழ்த் தொட­ரில் நடித்­தி­ருக்­கி­றார்.

வரும் 20ஆம் தேதி இந்­தத் தொடர் ஒளி­ப­ரப்­பா­கிறது. இயக்­கு­நர் ராம் சுப்­ர­ம­ணி­யம் இயக்­கி­யுள்ள இத்­தொ­ட­ரின் கதை தமக்கு மிக­வும் பிடித்­துப்­போ­ன­தா­கச் சொல்­கி­றார் தமன்னா.

"இயக்­கு­நர் ராம் சுப்­ர­ம­ணி­யன் இத்­தொ­ட­ரின் முதல் மூன்று பகு­தி­க­ளுக்­கான கதையை விவ­ரித்­த­போது வெகு­வா­கக் கவ­ரப்­பட்­டேன். இது எனக்­கான கதை என்று அப்­போதே மன­தில் தோன்­றி­யது.

"எனது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் அனு­ராதா. எதிர்­மறை கதா­பாத்­தி­ரம் என்­றா­லும் ரசி­கர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் அழ­காக அதைச் செதுக்கி உள்­ளார் இயக்­கு­நர் ராம். தன்­னம்­பிக்­கை­யும் துணிச்­ச­லும் மிக்க பெண்­தான் அனு­ராதா. எனக்­கும் அப்­ப­டிப்­பட்ட இயல்­பு­கள் உண்டு என்­ப­தால் இந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் மன­மொன்றி நடித்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் தமன்னா.

கதைப்­படி தமன்­னா­வின் தந்தை ஓர் எழுத்­தா­ளர். அவர் மீது திடீ­ரென ஒரு கொலைப்­பழி விழு­கிறது. தன் தந்தை கொலை செய்ய அறவே வாய்ப்­பில்லை என்று உறு­தி­யாக நம்­பும் தமன்னா அவரை அந்­தக் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­விக்க என்­ன­வெல்­லாம் செய்­கி­றார் என்­ப­து­தான் 'நவம்­பர் ஸ்டோரி'யின் கதை­யாம்.

மொத்­தம் ஏழு பகு­தி­க­ளாக இந்­தத் தொடர் உரு­வாகி இருக்­கிறது. முன்­பெல்­லாம் இணை­யத் தொடர்­களை பார்க்­கும் ஆர்­வம் தமக்கு இருந்­த­தில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், கொரோனா ஊர­டங்­கின்­போ­து­தான் அவற்­றில் கவ­னம் செலுத்­தத் தொடங்­கி­னா­ராம்.

திரை­ய­ரங்­கில் நண்­பர்­க­ளோ­டும் குடும்­பத்­தா­ரோ­டும் உற்­சாக கூச்­சல் போட்டு, விசி­ல­டித்து படம் பார்ப்­பது தனி அனு­ப­வம் என்று குறிப்­பி­டு­ப­வர், மடிக்­க­ணினி முன் அமர்ந்து படம் பார்க்­கும் வகை­யில் சூழ்­நிலை மாறி­விட்­டது வருத்­தம் தரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

இணை­யத் தொடர்­க­ளுக்­கான எழுத்­தும் அதன் உரு­வாக்­க­மும் திரைப்­ப­டங்­க­ளுக்­கான மெனக்­கெ­ட­லை­விட பல­ம­டங்கு கூடு­த­லா­னது என்று குறிப்­பி­டு­ப­வர், இணை­யத் தொடர்­களில் நடிப்­ப­தன் மூலம் பல புதிய விஷ­யங்­க­ளைக் கற்­றக்­கொள்ள முடி­கிறது என்­கி­றார்.

எந்த மொழித் திரைப்­ப­ட­மாக இருந்­தா­லும் சரி, இயக்­கு­நரே எழுத்­தா­ள­ரா­க­வும் இருந்­து­விட்­டால் அந்­தப் படம் எதிர்­பார்த்­த­தை­விட சிறப்­பாக உரு­வா­கிறது என்று சொல்­லும் தமன்னா, இது அனு­பவ ரீதி­யில் தாம் கண்ட உண்மை என்­கி­றார்.

"அந்த வகை­யில் 'நவம்­பர் ஸ்டோரி'யின் இயக்­கு­நர் ராம் நாரா­ய­ணன் நல்ல எழுத்­தா­ளர். எனவே, தன்­னு­டைய கதா­பாத்­தி­ரங்­களை ஒரு வலைப்­பின்­ன­லுக்­குள் எப்­படி கொண்­டு­வர வேண்­டும் என்­பது அவ­ருக்கு நன்­றா­கத் தெரிந்­தி­ருக்­கிறது.

"மேலும் ஓர் இணை­யத் தொட­ருக்­கான எழுத்து எவ்­வாறு இருக்­க­வேண்­டும் எனும் சூட்­சு­ம­மும் அவ­ருக்­குப் புரிந்­தி­ருக்­கிறது. அத­னால்­தான் அவ­ரது தொட­ரில் நடிக்க ஒப்­புக்­கொண்­டேன்.

"சிறப்­பான கதை, திறமை வாய்ந்த குழு, நல்ல இயக்­கு­நர் அமை­யும் பட்­சத்­தில் இணை­யத் தொடர்­களில் நடிக்க தயங்க மாட்­டேன்," என்­கி­றார் தமன்னா.

தமக்­குக் கிடைத்து வரும் நல்ல வாய்ப்­பு­கள் மகிழ்ச்சி அளிப்­ப­தாக சொல்­ப­வர், அதை முழு­மை­யாக அனு­ப­விக்க முடி­யாத வகை­யில் கொரோனா விவ­கா­ரம் மன­தைப் பாதித்­துள்­ள­தாக வருந்­து­கி­றார். மக்­கள் படும் துய­ரங்­களை எதிர்­கொள்­ளும் அவ­லங்­க­ளைப் பார்க்­கும்­போது மனம் வலிப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

திரைத்­து­றை­யைச் சார்ந்த பல பிர­ப­லங்­கள் கொரோ­னா­வுக்­குப் பலி­யாகி இருப்­பது அதிர்ச்சி அளிப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், தமது நண்­பர்­கள் உற­வி­னர்­களில் பல­ரும்­கூட தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருப்­பது கவலை அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!