தமன்னா: எங்கள் உலகத்துக்குள் ரசிகர்கள் வரவேண்டும்

தந்தை, மகள் இடை­யே­யான ஆழ­மான உறவை விவ­ரிக்­கும் கதை­யாக உரு­வாகி உள்­ளது 'நவம்­பர் ஸ்டோரி'. இது தமன்னா நடிக்­கும் முதல் இணை­யத் தொடர்.

"அதி­கா­ர­மும் பண­ப­ல­மும் உள்­ள­வர்­கள் ஒரு செய­லில் துணிச்­ச­லாக ஈடு­ப­டு­வது பெரிய விஷ­ய­மல்ல. ஆனால், சாதா­ரண, சரா­சரி வாழ்க்­கையை வாழும் ஒரு­வர் துணிந்து முடி­வெ­டுப்­பது பெரிய விஷ­யம்.

"அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளைப் பார்க்­கும்­போது நாமும் இப்­படி இருக்­க­வேண்­டும் எனும் எண்­ணம் ஏற்­படும். அப்­ப­டிப்­பட்­ட­வள்­தான் இந்­தத் தொட­ரில் நான் ஏற்று நடித்­துள்ள அனு­ராதா கதா­பாத்­தி­ரம்," என்­கி­றார் தமன்னா.

ஜி.எம்.குமார், பசு­பதி, விவேக் பிரசன்னா உள்­ளிட்ட பலர் இந்­தத் தொட­ரில் நடித்­துள்­ள­னர். மூவ­ருமே தங்­கள் கதா­பாத்­தி­ரத்­து­டன் நூறு விழுக்­காடு பொருந்தி நடித்­துள்­ள­தாக சொல்­கி­றார் தமன்னா.

"ஜி.எம்.குமார் சாரை­யும் என்­னை­யும் பார்த்­தால் அப்பா, மகள் மாதி­ரி­தான் தோன்­றும். அத­னால் இயல்­பா­கவே எங்­க­ளுக்­குள் ஒரு பாசப் பிணைப்பு ஏற்­பட்டு விட்­டது. தொட­ருக்­காக நடிக்­கும் உணர்வே ஏற்­ப­ட­வில்லை. திரை­யில் இத்­தொ­ட­ரைப் பார்க்­கும்­போது ரசி­கர்­க­ளால் இதை உண­ர­மு­டி­யும்.

"பசு­பதி சாரைப் பொறுத்­த­வரை திரைக்கு வெளியே மிக அன்­பா­ன­வர், எளி­மை­யா­ன­வர். ஆனால், திரை­யில் அவ­ரது கதா­பாத்­தி­ரம் மிகத் தீவி­ர­மா­ன­தாக மர்­மங்­கள் சூழ்ந்­த­தாக இருக்­கும். விவேக், பிர­சன்னா உட்­பட மற்ற கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் பொருத்­த­மான நடி­கர்­கள் அமைந்­த­னர். இப்­ப­டிப்­பட்ட இணை­யத் தொடர்­க­ளை­த்தான் ரசி­கர்­கள் விரும்­பு­வ­தாக நினைக்­கி­றேன்," என்று சொல்­லும் தமன்னா, பெண்­களை மையப்­ப­டுத்தி எடுக்­கப்­படும் இணை­யத் தொடர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

பல நடி­கை­க­ளுக்கு இப்­போ­து­தான் தங்­கள் திற­மைக்­கேற்ற பாத்­தி­ரங்­கள் அமை­வ­தாக சொல்­ப­வர், அண்­மைக் கால­மா­கத்­தான் தமக்கு உரிய உண்­மை­யான பாராட்­டு­களும் வெளிப்­ப­டை­யான வாழ்த்­து­களும் வரத் தொடங்­கி­யுள்­ள­தாக மகிழ்ச்சி தெரி­விக்­கி­றார்.

"பெண்­க­ளுக்­கான கதை­கள் அதி­கம் உரு­வாகி வரு­வது ஒரு நடி­கை­யாக எனக்­கும் மகிழ்ச்சி தரு­கிறது. உண்­மை­யைச் சொல்­வ­தா­னால் முன்­பை­விட இப்­போ­து­தான் வித­வி­த­மான கதா­பாத்­தி­ரங்­கள் தேடி­வ­ரு­கின்­றன.

"மிக விரி­வா­கக் கதை கேட்டு, தனிப்­பட்ட முறை­யில் சில பயிற்­சி­களை மேற்­கொண்டு, ஆழ­மான நடிப்பை வெளிப்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பை இணை­யத் தொடர்­கள் அளிக்­கின்­றன.

"தமன்னா இப்­ப­டிப்­பட்ட நடிகை' எனும் பிம்­பத்தை, தோற்­றத்தை உடைத்து வெளியே வர­மு­டி­கிறது," என்­கி­றார் தமன்னா.

'நவம்­பர் ஸ்டோரி' எப்­ப­டிப்­பட்ட தொட­ராக இருக்­கும்?

"முன்பே குறிப்­பிட்­டது போல் இணை­யத் தொடர்­களை வீட்­டில் தனி­யாக அமர்ந்து பார்க்­கி­றோம். திரைப்­ப­டங்­க­ளைப் போன்று குடும்­பத்­து­டனோ நண்­பர்­க­ளு­டனோ உட்­கார்ந்து பார்ப்­ப­தில்லை. அதற்­கான வாய்ப்­பு­கள் குறைவு.

"எனவே, இணை­யத் தொடர்­கள் பல வகை­களில் நம்­மோடு பொருந்­திப் போக­வேண்­டும். 'நவம்­பர் ஸ்டோரி' இணை­யத் தொட­ரைப் பார்ப்­ப­வர்­கள் எங்­கள் எதிர்­பார்ப்­பின்­படி தனி உல­கத்­துக்­குள் செல்ல வேண்­டும்.

"அதா­வது கதா­நா­யகி அனு­ராதா, அவ­ளு­டைய தந்தை கணே­ச­னின் உல­கத்­துக்­குள் ரசி­கர்­கள் போக­வேண்­டும். அப்­போ­து­தான் அந்த இரு­வ­ரது வாழ்க்கை எப்­ப­டிப்­பட்­டது என்­பதை உண­ர­மு­டி­யும்.

"அனு­ராதா ஒரு சாதா­ரண பெண். ஆனால் அவள் அசா­தா­ர­ண­மான விஷ­யங்­களை எதிர்­கொள்­கி­றாள். இதை ரசி­கர்­கள் புரிந்­து­கொள்­ளும் பட்­சத்­தில் இந்­தத்­தொ­டர் வெற்றிபெறும்," என்­கி­றார் தமன்னா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!