கவர்ச்சியுடன் புகைப்படங்களை வெளியிட்டார்; விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடும் நடிகைகளில் ரைஸா வில்சனும் ஒருவர். ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாட இத்தளங்கள் பெரிதும் கைகொடுப்பதாக அவர் சொல்கிறார்.

இந்நிலையில், தாம் கவர்ச்சியாக உடையணிந்துள்ள சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியிட்டிருந்த ரைஸாவுக்குத் திடீரென எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.

“இப்படிப்பட்ட புகைப்படங்களை எதற்காக வெளியிட வேண்டும்? இதனால் என்ன நன்மை விளையப் போகிறது?” என்றெல்லாம் சிலர் கோபத்துடன் விமர்சித்துள்ளனர்.

மேலும், சிலரோ ரைஸாவைக் கிண்டல் செய்தும் கடுமையாக விமர்சித்தும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அதேசமயம், ஒருதரப்பினர் ரைஸாவுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

இந்நிலையில், தாம் கவர்ச்சியாக உடை அணிவதை விமர்சிப்பது கொரோனா காலகட்டத்தில் வீண் வேலை என்று ரைஸா பதிலடி கொடுத்துள்ளார்.

இளையர்களும் மற்றவர்களும் கவனம் செலுத்தவேண்டிய வேறு பல பெரிய பிரச்சினைகள் உள்ளன என்றும் யாரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் ரைஸா கூறியுள்ளார்.

“ஒரு நடிகை நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் என்பது சாதாரண விஷயம். எனக்குப் பிடித்தமான உடைகளை அணிகிறேன். இதனால் என்ன கெட்ட பெயர் வந்துவிடும்?

“நான் அவ்வாறு நினைக்கவில்லை. எனது பதிவுகள் பிடிக்கவில்லை எனில் என்னைப் பின்தொடர வேண்டாம். போலிக் கணக்கு வைத்திருப்பவர்கள்தான் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற மோசமான பதிவுகளை வெளியிட்டு வெறுப்பை உமிழ்கிறார்கள்,” என்று ரைஸா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கோபத்துடனும் உள்நோக்கத்துடனும் பதிவிடுபவர்களை நினைத்துத் தாம் வருத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், பிறர் மீது வெறுப்பைக் காட்டுபவர்கள் எதிலும் எதிர்மறையாகவே உள்ளனர் என்று கூறியுள்ளார்.

எல்லாவற்றையுமே சிலர் எதிர்மறையான கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களுடைய சிந்தனையும் எதிர்மறையானதாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியே இருக்காது,” என்றும் ரைஸா தெரிவித்துள்ளார்.

தற்போது ‘காதலிக்க யாருமில்லை’, ‘எஃப்ஐஆர்’, ‘ஹாஷ்டேக் லவ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரைஸா.

“வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால், முதலில் நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். எப்போதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.

“முன்பு இதுகுறித்து யோசித்து மனம் வருந்தினேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு மற்ற விஷயங்களுக்காக நாம் கவலைப்பட வேண்டி உள்ளது என்பதை உணர்ந்தேன். திரைமறைவில் விமர்சிப்பவர்கள் நேரடியாக என் முகத்தைப் பார்த்து சொல்லும் தைரியமற்றவர்கள். இனி கண்டுகொள்வதாக இல்லை,” என்றார் ரைஸா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!