திரைச்செய்திகள்

குறும்படம் இயக்கும் ராஜமவுலி

கொரோனா பிரச்சினை காரணமாக 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் ராஜமவுலி ஒரு குறும்படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இது கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் உண்மை என்கிறது தெலுங்கு திரையுலக வட்டாரம். அதாவது, கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுடைய உயிரையும் பெரிதுபடுத்தாமல், ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காக பாடுபட்டு வரும் முன்களப் பணியாளர்கள், காவலர்களின் அர்ப்பணிப்பையும் அவர்களது வேலையையும் மையமாக வைத்து சுமார் 20 நிமிடம் ஒளிபரப்பக்கூடிய குறும்படம் ஒன்றை விழிப்புணர்வு நோக்கத்தோடு இயக்க உள்ளார். இதற்காக தெலுங்கானா காவல்துறையினரை குறும்படம் சம்பந்தமாக சந்தித்துள்ளதாகவும் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.

பிரபல கேரள குற்றவாளி சுகுமாரா

வேடத்தில் துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர். நேர்மையான காதலராக, துணிச்சல் மிகுந்த இளைஞனாக, அடுத்த வீட்டு பையனாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து, ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அடுத்து இவர், கேரள பிரபல குற்றவாளி சுகுமாரா குருப்பின் வாழ்கை வரலாற்றைத் தழுவி 'குருப்' படத்தைத் தயாரித்து, நடித்திருக்கிறார். அடர்ந்த காட்டினுள் கார் ஒன்று எரியும் காட்சியில் ஆரம்பிக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி, துல்கரை பிடிக்க காவல்துறை எடுக்கும் முயற்சிகளைக் காட்சிப்படுத்துகிறது. இந்த முன்னோட்டக் காட்சி வெளியாகி இதுவரை 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து பகிரப்பட்டு வருகிறது. ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வில்லனாக களமிறங்கும் மாதவன்

'சாக்லெட் பாய்' என்று அன்பாக அழைக்கப்படும் மாதவன் தற்பொழுது லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

தமிழில் 'ஆனந்தம்', 'ரன்', 'பையா', 'சண்டக்கோழி' என பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்த லிங்குசாமி, தற்பொழுது தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார்.

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில், அதிரடி சண்டைப் படமாக உருவாக உள்ள இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. அந்த கதாபாத்திரத்தில்தான் மாதவன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!