‘பார்டர்’ படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு

'பார்­டர்' படத்­தின் வெளி­யீட்­டுத் தேதியை தள்ளி வைத்­துள்­ள­னர். அறி­வ­ழ­கன் இயக்கி உள்ள அதி­ர­டிப் படம் இது.

அருண்­ வி­ஜய் நாய­க­னா­க­வும் ஸ்டெஃபி படேல் அவ­ரது ஜோடி­யா­க­வும் நடித்­துள்­ள­னர். ரெஜினா கஸான்ட்ரா மற்­றொரு நாய­கி­யாக தோன்­று­வார்.

விஜய் ராக­வேந்­திரா தயா­ரித்­துள்ள இப்­ப­டத்­துக்கு சாம் சி.எஸ். இசை­ய­மைத்­துள்­ளார்.

கொரோனா இரண்­டா­வது அலைக்கு முன்பே இப்­ப­டத்தை வெளி­யி­டத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். இந்­நி­லை­யில் தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரித்­த­தால் திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட, பட­வெ­ளி­யீடு பாதிக்­கப்­பட்­டது. பின்­னர் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டு­வது தொடர்­பாக சில நிறு­வ­னங்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடந்து வந்­த­தாம்.

இந்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் தற்­போது தொற்­றுப்­ப­ர­வல் குறை­யத் தொடங்கி உள்­ளது. அநே­க­மாக ஜூலை மாதத்­தில் திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் உற்­சா­க­ம­டைந்­துள்ள படக்­கு­ழு­வி­னர் திரை­ய­ரங்­கு­களில் இப்­ப­டத்தை வெளி­யி­ட­லாம் என தயா­ரிப்­புத் தரப்­பி­டம் வலி­யு­றுத்தி உள்­ள­ன­ராம்.

இதை ஏற்று இணையத்தில் வெளியிடும் திட்டத்தைத் தயாரிப்பாளர் கைவிட்டுள்ளாராம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய சுதந்திர தினத்தையொட்டி இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் போவதாகத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!