திரைத் துளிகள்

கிரிக்கெட் வீரர் வேடத்தில் சூர்யா

சூர்யா அடுத்து நடிக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானபடி உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று.

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம் உருவாகிறது. அதில் யாரை நடிக்க வைப்பது என்று தயாரிப்புத் தரப்பு யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த முயற்சி கைகூடி வந்தால் தமது கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாதான் பொருத்தமானவர் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

"சூர்யா எனக்கு மிகப் பிடித்தமான நடிகர். அவரால்தான் எனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும். அவரைப் போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த நடிகர் ஒருவர் எனது கதாபாத்திரத்தில் நடிப்பதையே விரும்புகிறேன்," என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஓவியா கருத்தால் வெடித்த சர்ச்சை

பாலியல் தொல்லைகளுக்கு ஆளானது குறித்து பிரபலங்கள் பலரும் 'மீ டூ' என்ற இயக்கத்தின் மூலம் அவ்வப்போது தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து விவரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஓவியாவின் 'மீ டூ' பதிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

"உங்கள் மகள்களுக்கு தற்காப்புக் கலைகள், 'மீ டூ' குறித்து சொல்லிக் கொடுப்பதற்குப் பதிலாக உங்கள் மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுங்கள்," என்று பதிவிட்டுள்ளார் ஓவியா.

இதனால் ஒருதரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல என்று அத்தரப்பினர் ஓவியாவுக்குப் பதில் அளித்துள்ளனர்.

ஆண், பெண் இருபாலருக்கும் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!