திரைத் துளிகள்

நகைச்சுவை படத்தில் நயன்தாரா

இயக்குநர் யுவராஜாவின் புதிய படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத் தில் நடிக்க உள்ளார். இது முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாக இருப்பதாகத் தகவல்.

தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த 'போட்டா போட்டி', வடிவேலு நடித்த 'தெனாலிராமன்', 'எலி' ஆகிய படங்களை இயக்கியவர் யுவராஜ்.

இவர் அண்மையில் நயன்தாராவை நேரில் சந்தித்து சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாம். இதையடுத்து உடனடியாக யுவராஜுக்கு கால்ஷீட் ஒதுக்கி உள்ளார்.

"நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவைப் படத்தில் நடிப்பது மனதுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும், தன் ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தைத் தரும்," என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் நயன்தாரா.

சதா: பலமுறை அழுதுள்ளேன்

'சந்திரமுகி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னைத் தான் முதலில் தேடி வந்ததாக நடிகை சதா கூறியுள்ளார்.

அந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனதை நினைத்து பலமுறை அழுததாக அவர் அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

'ஜெயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, பின்னர் சங்கர் இயக்கத்தில் உருவான 'அந்நியன்' படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் 'சந்திரமுகி' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இரண்டு முறை தம்மைத் தேடி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

"சூழ்நிலை காரணமாக அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து பல சமயங்களில் அழுதுள்ளேன். இனி அத்தகைய வாய்ப்பு மீண்டும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ளேன்," என்கிறார் சதா.

'சந்திரமுகி'யில் நடிகை மாளவிகா நடித்த கதாபாத்திரத்தில் தான் இவரை ஒப்பந்தம் செய்ய இருந்தனராம்.

'செல்ஃபி'யால் உற்சாகமான யாஷிகா

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் மிதிவண்டிப் பயணம் (சைக்கிளிங்) மேற்கொண்டார். அப்போது அவருடன் நடிகை யாஷிகா ஆனந்த் 'செல்ஃபி' படம் எடுத்துக்கொண்டார்.

அந்தப் படத்தை அவர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டதுடன் முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். அந்தப் படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மாமல்லபுரம் வரை சென்றார். அவரது நண்பர்களும் இதில் பங்கேற்றனர்.

இடையில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது தமது அதிர்ஷ்டம் என்கிறார் யாஷிகா.

சனம் ஷெட்டி போலிசில் புகார்

சமூக வலைத்தளம் வழி தமக்கு தொடர்ந்து ஆபாச தகவல்களை அனுப்பி வருபவரைப் பற்றி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. இது குறித்து இணைய குற்றப்பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு வந்த ஆபாச தகவல்களையே ஆதாரமாக அளித்துள்ளார் சனம் ஷெட்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!