‘உழைப்பைக் கொட்டுகிறார் விக்ரம்’

'கோப்ரா' படம் தமிழ்த் திரை­யு­லகை மட்­டும் அல்­லா­மல் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வை­யும் திரும்­பிப் பார்க்க வைக்­கும் என்­கி­றார் இளம் நாயகி மீனாட்சி கோவிந்­த­ரா­ஜன்.

அண்­மைய பேட்டி ஒன்­றில், நடி­கர் விக்­ரம் ஒரு படத்­துக்­காக கொ­ட்டும் உழைப்­பைக் கண்டு தாம் மிரண்டு விட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

அஜய் ­ஞா­ன­முத்து இயக்­கத்­தில் உரு­வாகி வரு­கிறது 'கோப்ரா'. நாய­கன் விக்­ரம் இதில் பல வித்­தி­யா­ச­மான தோற்­றங்­களில் நடிப்­பது தெரிந்த விஷ­யம். எனி­னும் படம் குறித்த மேல­திக தக­வல்­கள் ஏதும் வெளி­யா­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தில் படக்­கு­ழு­வி­னர் கவ­ன­மாக உள்­ள­னர்.

"விக்­ரம் சார் இதில் எத்­தனை தோற்­றங்­களில் திரை­யில் தோன்­று­வார் என்­பது எங்­க­ளுக்கே உறு­தி­யா­கத் தெரி­ய­வில்லை. விரல் விட்டு எண்ண முடி­யாத வகை­யில் அவர் நடித்­தி­ருப்­ப­தா­கச் சொல்­ல­லாம்.

"ஒவ்­வொரு தோற்­றத்­துக்­கா­க­வும் ஒப்­பனை போட்­டுக்­கொள்ள பல மணி நேர­மா­கும். இருப்­பி­னும் பொறு­மை­யாக காத்­தி­ருப்­பார்.

"எல்­லாமே வித்­தி­யா­ச­மா­க­வும் சவால் நிறைந்­த­தா­க­வும் இருக்­கும். ரசி­கர்­க­ளின் ஆர்­வத்­தைத் தூண்­டு­வ­தாக இருக்­கும்.

"விக்­ரம் சாரைப் பொறுத்­த­வரை அவர் இருந்­தால் படப்­பி­டிப்­புத் தளம் உற்­சா­க­மாக இருக்­கும். எல்­லோ­ரை­யும் ஊக்­கப்­ப­டுத்­து­வார். அவ­ரு­டன் பணி­யாற்­றிய அனு­ப­வம் மறக்­க­மு­டி­யா­தது," என்று சொல்­லும் மீனாட்சி, இயக்­கு­நர் அஜய் ஞான­முத்­து­வை­யும் பாராட்ட மறப்­ப­தில்லை.

தரம் என்று வரும்­போது எந்­த­வி­தத்­தி­லும் சம­ர­சம் செய்­து­கொள்­ளாத படைப்­பாளி அஜய் என்­கி­றார்.

"ஒரு காட்­சியை அஜய் ஞான­முத்து சார் விவ­ரிக்­கும் பாங்கு அலா­தி­யா­னது. நூறு விழுக்­காடு அல்­லது அதற்­கும் மேலான தரம் என­ப­து­தான் அவ­ரது கொள்கை. எந்த ஒரு காட்­சி­யி­லும் ஒரு விழுக்­காடு சரி­யாக அமை­ய­வில்லை என்­றா­லும்­கூட பர­வா­யில்லை என்று விட்­டு­விட மாட்­டார். அந்­தக் காட்­சியை மீண்­டும் பட­மாக்­க­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருப்­பார்.

"இந்­தப் படத்­தில் நடித்­த­தன் மூலம் பத்து படங்­களில் நடித்­த­தற்­கான அனு­ப­வம் கிடைத்­தி­ருப்­ப­தாகக் கருது­கி­றேன்.

"இப்­ப­டிப்­பட்ட படங்­கள் அமைந்­தால் எது­கு­றித்­தும் யோசிக்­கா­மல் கண்ணை மூடிக்­கொண்டு ஒப்­பந்தத்­தில் கையெ­ழுத்­தி­டு­வேன்," என்­கி­றார் மீனாட்சி.

இதற்­கி­டையே விக்­ரம் நடிப்­பில் உரு­வாகி இன்­னும் வெளி­யீடு காணா­மல் உள்ள 'துரு­வ­நட்­சத்­தி­ரம்' படம் குறித்த புதிய தக­வல் வெளி­யாகி உள்­ளது.

பல பிரச்­சி­னை­க­ளைக் கடந்து இப்­ப­டத்தை விரை­வில் வெளி­யிட உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் முழுப் படத்­தை­யும் திரை­யிட்­டுப் பார்த்­தா­ராம் விக்­ரம். மொத்­தப் பட­மும் சுமார் நான்­கரை மணி நேரம் ஓடக்­கூ­டிய வகை­யில் உள்­ள­தாம்.

இதை­ய­டுத்து 'பாகு­பலி' போன்று அதை இரண்டு பாகங்­க­ளாக வெளி­யி­ட­லாம் என்ற யோச­னையை விக்­ரம் முன்­வைத்­துள்­ளார்.

படத்­தின் இயக்­கு­நர் கௌதம் மேன­னும் இந்த யோச­னையை ஏற்­றுக் கொண்­டா­ராம்.

இதை­ய­டுத்து மீண்­டும் படத்­தொ­குப்பு பணி­க­ளைத் தொடங்கி இரண்டு பாகங்­க­ளாக படத்­தைப் பிரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தொடங்கி உள்­ளன.

இத­னால் விக்­ரம் ரசி­கர்­கள் படம் எப்­போது வெளி­யா­கும் என ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!