பா.ரஞ்சித்: ஆர்யாவுக்கான பலன் விரைவில் கிடைக்கும்

ஆர்­யா­வின் கடி­ன­மான உழைப்­புக்கு நிச்­ச­யம் பெரிய அள­வில் பலன் கிடைக்­கும் என்று பாராட்டு­கி­றார் இயக்­கு­நர் பா.ரஞ்­சித்.

இவ­ரது இயக்­கத்­தில் ஆர்யா நாய­க­னாக நடித்­துள்ள 'சார்­பட்டா பரம்­பரை' விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது.

திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டி­ருப்­

ப­தால் நேர­டி­யாக இணை­யத்­தில் படத்தை வெளி­யிட முடிவு செய்­த­போது முன்­னணி நிறு­வ­னம் ஒன்று தானாக முன்­வந்து பெரும் தொகைக்கு வெளி­யீட்டு உரி­மையை வாங்கி உள்­ளது பழைய தக­வல். இதைப் படக்­கு­ழு­வி­னர் எதிர்­பார்க்­க­வில்­லை­யாம்.

இந்­நி­லை­யில் ஆர்­யா­வுக்­குக் கிடைக்க வேண்­டிய பலன் இதை­விட அதி­கம் என்­கி­றார் ரஞ்­சித்.

"இப்­ப­டத்­தின் பெரும் பலமே சண்­டைக் காட்­சி­கள்­தான். தேசிய விருது பெற்ற சண்­டைப் பயிற்­சி­யா­ளர்­க­ளான இரட்­டை­யர்­கள் அன்பறிவு (அன்பு, அறிவு) முக்­கி­யக் காட்­சி­களை வடி­வ­மைத்­த­னர்.

"இந்த சண்­டைக் காட்­சி­களில் நடிப்­ப­தற்­காக சுமார் ஓராண்­டுக்­கும் மேலாக தீவிர குத்­து

சண்­டைப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டார் ஆர்யா. நான் கேட்­டுக்கொண்­ட­தற்­காக கடு­மை­யாக உழைத்து ஹாலி­வுட் கதா­நா­ய­கர்­களை

மிஞ்­சும் அள­வுக்கு அசல் குத்­துச்­சண்டை வீர­ரா­கவே மாறி­விட்­டார். எங்­கள் குழு­வின் உழைப்­புக்கு கைமேல் பலன் கிடைத்­துள்­ளது. இனி ஆர்­யா­வுக்­குக் கிடைக்க வேண்­டி­யது நிச்­ச­யம் கிடைக்­கும்," என்று மீண்டும் பாராட்டி உள்ளார் பா. ரஞ்சித்.

'சார்பட்டா பரம்பரை' படத்தின் ஒரு காட்சியில் ஆர்யா, கலையரசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!