‘வலிமை’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியானது

'வலிமை' படத்­தின் அண்­மைய தக­வல் என்ன என்பது குறித்து செவ்வாய்க் கிர­கத்தை மட்­டுமே அஜித் ரசி­கர்­கள் தொடர்­பு­கொள்­ளவில்லை. மற்­ற­படி அனை­வ­ரி­ட­மும் இந்­தக் கேள்­வி­யைக் கேட்­டு­விட்­டார்­கள்.

இப்­போ­தைக்கு எந்­தத் தக­வ­லும் வராது என்று அவர்­கள் முடிவு செய்­தி­ருந்த நேரம் பார்த்து 'வலிமை'யின் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டி­கள் வெளி­யாகி உள்­ளன.

நேற்று முன்­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை படத்­தின் 'மோஷன்' சுவ­ரொட்­டி­யும் வெளி­யா­னது. வழக்­க­மாக அஜித் சம்­பந்­தப்­பட்ட அறி­விப்­பு­கள் வியா­ழக்­கி­ழ­மை­க­ளில்­தான் வெளி­யா­கும். அன்­றைய தினம்­தான் அஜித்­துக்கு ராசி­யா­னது என்­பது கோடம்­பாக்­கத்­துக்கு நன்கு தெரிந்த விஷ­யம்.

அதற்கு நேர்­மா­றாக 'வலிமை' சுவ­ரொட்­டி­கள் ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று வெளி­யா­னது ரசி­கர்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

சில தினங்­க­ளுக்கு முன்பு 'வலிமை'யின் சில காட்­சி­களை மட்­டும் மீண்­டும் பட­மாக்­கு­வ­தற்­காக படக்­கு­ழு­வி­னர் ஹைத­ரா­பாத் சென்­ற­னர். அங்கே படப்­பி­டிப்பு நடத்­தும்­போதே பட சுவ­ரொட்­டி­களை உரு­வாக்­கும் பணி­யும் ஒரு­சேர நடந்­துள்­ளது.

அவற்­றைப் பார்த்த அஜித், எல்­லாம் சரி­யாக இருப்­ப­தாக பச்­சைக்­கொடி காட்ட, தயா­ரிப்­பா­ளர் போனி கபூ­ருக்கு அனுப்பி வைத்­துள்­ள­னர். அவ­ரும் அடுத்த நிமி­டமே மன­நி­றைவு தெரி­விக்க நேரம், தேதி, கிழமை என்­றெல்­லாம் பார்க்­கா­மல் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை வெளி­யிட்­டுள்­ள­னர்.

கறுப்பு ஜெர்க்­கின் உடை, கறுப்பு தலைக்­க­வ­சம் அணிந்­துள்ள ஓர் உரு­வம் நிமிர்ந்து நிற்க, அந்­தத் தலைக்­க­வ­சத்­தில் இருந்து அடுத்­த­டுத்த காட்­சி­கள் திரை­யில் விரி­கின்­றன.

தொழிற்­சாலை போன்ற இடத்­தில் சிலர் கம்­பி­க­ளின் மீது தொங்­கி­ய­படி இருக்­கி­றார்­கள். அங்கு திடீ­ரென வேக­மாக ஓடி­வ­ரும் சிலர் முன்பு தோன்றி மோத­லுக்­குத் தயா­ராக நிற்­கி­றார் அஜித்.

அடுத்த காட்­சி­யாக 'பவர் இஸ் எ ஸ்டேட் ஆஃப் மைன்ட்' எனும் வார்த்­தை­கள் திரை­யில் தோன்­று­கின்­றன.

'வலிமை என்­பது மன­தின் ஒரு நிலை' என்று அஜித் அடிக்­கடி கூறு­வார். அதை இந்­தப் படத்­தில் பயன்­ப­டுத்தி உள்­ள­னர்.

இறு­தி­யாக இரு­சக்­கர வாக­னத்­தில் குளிர் கண்­ணா­டி­கள் அணிந்­தி­ருக்­கும் அஜித், மிக ஸ்டை­லாக திரை­யில் தோன்­று­கி­றார். இந்த சுவ­ரொட்­டி­க­ளுக்கு எதிர்­பார்த்­த­து­ போ­லவே ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இந்த ஆண்டு இறு­திக்­குள் படம் வெளி­யீடு காணும் என உறுதி செய்­துள்­ள­னர். நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­குமா அல்­லது திரை­ய­ரங்­கில் நூறு விழுக்­காடு இருக்­கை­களை நிரப்­பு­வ­தற்­கான அர­சின் அனு­மதி கிடைக்­குமா என்­பதை அறிய அஜித் ரசி­கர்­கள் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!