ஐஸ்வர்யா ராஜேஷ்: மாற்று ஏற்பாடுகள் தேவை

விக்­னேஷ் கார்த்­திக் இயக்­கத்­தில் உரு­வா­கி­உள்­ளது ‘திட்­டம் இரண்டு’. முதன்­மு­றை­யாக இதில் காவல்­துறை ஆய்­வா­ள­ராக நடித்­துள்­ளார் ஐஸ்­வர்யா.

“உண்­மைச் சம்­ப­வம் ஒன்றை மைய­மாக வைத்து காட்­சி­களைக் கோர்த்­துள்­ளார் இயக்­கு­நர். ஒரு கொலைச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடத்த வேண்­டிய பொறுப்பு நாயகி­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கிறது.

“கொலை செய்­யப்­பட்ட இளம் பெண் தனது தோழி என்­பது நாய­கிக்கு தெரிய வரும்­போது கடும் அதிர்ச்சி அடை­கி­றாள். உயிர்த்­தோ­ழியை கொன்­றது யார் என்­பதை அறிய தீவிர விசா­ர­ணை­யில் ஈடு­ப­டு­கி­றார்.

“காவல்­துறை அதி­காரி என்­ற­தும் வழக்க­மாக நீங்­கள் திரைப்­ப­டங்­களில் காணும் இத்­த­கைய கதா­பாத்­தி­ரங்­களை கற்­பனை செய்­யா­தீர்­கள். மிடுக்­காக வந்துபோவ­தும் விறைப்­பாக வச­னம் பேசு­வ­தும் மட்­டுமே என் வேலை­யல்ல. இதை இயக்­கு­நர் முன்பே தெளி­வா­கக் கூறி­விட்­டார்.

“என்­ன­தான் போலிஸ் அதி­கா­ரி­யாக இருந்­தா­லும், சரா­ச­ரிப் பெண்­ணா­க­வும் வலம் வரு­வேன். ஒரு பெண் எதிர்­கொள்ள வேண்­டிய இதர அம்­சங்­க­ளை­யும் இந்­தக் கதா­நா­யகி தன் வாழ்க்­கை­யில் சந்­திப்­பாள். எனவே எனது நடிப்­பில் பல்­வேறு உணர்­வு­களை வெளிப்­படுத்த வேண்­டி­யி­ருந்­தது.

“மிடுக்­கான அதி­கா­ரி­யாக நடித்­து­விட்டு, பின்­னர் திடீ­ரென குடும்­பப் பெண்­ணாக மாறு­வது என்­பது சற்றே சவா­லான ஒன்­று­தான். ஆனா­லும் இது எனக்­குப் பிடித்­தி­ருந்­தது.

“கொரோனா நெருக்­க­டி­யில் மொத்த உலக­மும் சிக்­கிக் கொண்­டுள்­ளது. அதி­லும் சினிமா துறை தத்­த­ளிக்­கிறது. சினிமா தொழி­லா­ளர்­க­ளின் குடும்­பங்­கள் தவிக்­கி­ன்றன.

“இத்­த­கைய சூழ­லில் ஒரு படத்தை முடக்கி வைப்­பது சரி­யல்ல. படத்தை முடித்த பிற­கும் வெளி­யிட முடி­யா­மல் ஒரு தயா­ரிப்­பா­ளர் தவிப்­பதை வார்த்­தை­க­ளால் விவ­ரிக்க இய­லாது.

“திரை­ய­ரங்­கு­களில் படத்தை வெளி­யிட வேண்­டும் என்ற முடிவு­டன்­தான் படம் எடுக்­கி­றோம். அதற்கு வாய்ப்பு இல்லை எனும்­போது மாற்று ஏற்­பா­டு­க­ளைச் செய்­யத்­தான் வேண்­டும்.

“ஒரு படம் தர­மாக இருந்­தால் போதும். திரை­ய­ரங்­கு­களில் இடம் கிடைக்­கா­விட்­டா­லும், இணை­யத்­தில் அதை வெளி­யிட முடி­யும் ரசி­கர்­க­ளி­டம் கொண்டு சேர்க்க முடி­யும் என்­பது பெரிய விஷ­ய­மா­கவே படு­கிறது,” என்­கி­றார் ஐஸ்­வர்யா.

தாம் நடித்த ‘க/பெ.ரண­சிங்­கம்’ படத்­துக்கு ‘ஓடிடி’ தளத்­தில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது என்று சுட்­டிக்­காட்­டு­பவர், ‘சூரரைப் போற்று’, ‘மண்­டேலா’, ‘சார்­பட்டா பரம்­பரை’ உள்­ளிட்ட படங்­களும் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யாகி நல்ல வசூல் கண்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!