திரைத் துளிகள்

ஆர்வத்துடன் நடித்த வரலட்சுமி

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகிறது 'தத்வமசி'. வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு இளம் நடிகர் இஷான்தான் நாயகன்.

இந்தப் படத்தின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி இயக்குநராக அறிமுகமாகிறார். அண்மையில் வெளியீடு கண்ட இதன் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

"மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள் என்று சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. அதற்கு அர்த்தம் என்னவென்று பலர் என்னிடம் கேட்டுள்ளனர். படத்தைப் பார்க்கும்போது எல்லாம் தெளிவாகப் புரியும் என்பதே எனது பதில்.

"இது ஒட்டுமொத்த இந்திய திரையுலகுக்கும் பொதுவான கதைக்களத்தைக் கொண்டுள்ள படம். அதனால்தான் ஆர்வத்துடன் நடித்தேன்," என்கிறார் வரலட்சுமி. பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மைக்காலமாக வரலட்சுமி நடித்த தெலுங்குப் படங்கள் வரிசையாக வெற்றிபெற்று வருகின்றன.

பக்குவமாகப் பதிலளித்த அனிகா

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அனிகா, இப்போது நாயகியாக நடிக்கத் தயாராகிவிட்டார். தற்போது அவர் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்.

அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார் அனிகா. அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் உள்ளாடைகள் தொடர்பாக கேள்வி எழுப்ப, அனிகா கோபமடைவார் என எதிர்பார்த்த மற்ற ரசிகர்களுக்கு ஆச்சரியம். காரணம், வெளிப்படையாக கேள்வி கேட்ட அந்த ரசிகருக்கு கோபப்படாமல் பதிலளித்தார் அனிகா.

"இப்படியொரு கேள்வியை எழுப்பியதற்காக நீங்கள் சங்கடமடையத் தேவையில்லை. எனினும் நான் உண்மையான பதிலைத் தெரிவித்தால் அது நிச்சயம் சங்கடம் தரும்," என்று அனிகா குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பக்குவமான செயல்பாடு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.

தகவல்கள் தர மறுக்கும் பூஜா

'பீஸ்ட்' படம் குறித்து தம்மிடம் இனி யாரும் எந்தத் தகவலையும் எதிர்பார்க்க வேண்டாம் என்கிறார் அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே.

தகவல் கேட்கும் ரசிகர்கள் இனி இயக்குநர் நெல்சன் திலிப்குமாரைத் தான் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டகிராமில் பூஜா ஹெக்டேவை 15 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களுடனான அண்மைய உரையாடலின்போது, 'பீஸ்ட்' படப்பிடிப்பு திட்டமிட்டபடியே சிறப்பாக நடந்துவருகிறது என்றும் அதன் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் நடனமாட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

'பீஸ்ட்' படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. இதையடுத்து சில தினங்களில் படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!