இருசக்கர வாகனத்தில் உலகப் பயணம்: தயாராகும் அஜித்

இருசக்கர வாகனத்தில் உலகப் பயணம்: தயாராகும் அஜித்

1 mins read
6dd91eeb-8eed-4a2c-9232-c155373832e5
-

இரு­சக்­கர வாக­னங்­கள் மீது அலாதி­யான விருப்­பம் கொண்­டிருப்­ப­வர் அஜித் என்­பது அவ­ரது ரசி­கர்­க­ளுக்கு நன்கு தெரி­யும்.

தான் நடிக்­கும் படங்­களில், கதைக்­குப் பொருத்­த­மாக பைக் துரத்­தல் காட்­சி­கள் இடம்­பெற்­றால் உற்­சாகமாகி­விடுவார். மேலும், அந்­தக் காட்­சி­கள் எவ்­வ­ளவு ஆபத்­தா­ன­வை­யாக இருந்­தா­லும் 'டூப்' போடா­மல் தாமே நடிக்கவேண்­டும் என்­றும் விரும்­பு­வார்.

இந்நிலையில், வெளி­நாட்­டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள தமது மோட்­டார் சைக்­கி­ளில் உல­கைச் சுற்றி வர திட்­ட­மிட்­டுள்­ளா­ராம் அஜித்.

அது எப்­போது நிக­ழும் என்­பதை திட்­ட­மி­ட­வில்லை என்­றா­லும், அந்­தப் பய­ணத்­துக்­கான முன்­னேற்­பா­டு­களும் மறை­முக பயிற்­சி­களும் தொடங்­கி­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

உல­கப் பய­ணத்­துக்கு முன்பு, வெவ்­வேறு நிலப்­ப­ரப்­பு­கள், வானிலை நிலவரங்­க­ளு­டன் தன்னை பழக்­கப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­கி­றார் அஜித். அத­னால்­தான் தமது படங்­க­ளுக்­கான படப்­பி­டிப்­பு­கள் வெளி­நா­டு­களில் நடக்­கும்­போது, தமது இரு­சக்­கர வாக­னத்­தை­யும் கையோடு கொண்டு செல்­கி­றார்.

படப்­பி­டிப்பு முழு­மை­யாக முடிந்த பின்­னர் படக்­குழு நாடு திரும்­பி­னா­லும், அஜித் மட்­டும் சில நாள்­கள் அந்த நாடு­களில் தங்கி இருப்­பது வழக்­கம். அந்த வாய்ப்­பை ­பயன்­ப­டுத்தி, பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வா­ராம்.அந்த வகை­யில், 'வலிமை' படத்­தின் இறு­திக்­கட்ட படப்­பி­டிப்பு ரஷ்­யா­வில் முடி­வ­டைந்த நிலை­யில், அஜித் அங்­கேயே தங்கி இருப்­ப­தாக செய்தி ­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

, :   