திரைத் துளிகள்

கங்கனா: பெருமையாக உள்ளது

கங்கனா ரணாவத் நடித்துள்ள 'தலைவி' படம் வெளியாகி உள்ளது. இதில் தமது நடிப்பு சிறப்பாக இருப்பதாக விமர்சகர்கள் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறுகிறார்.

ஜெயலலிதாவின் கதா பாத்திரத்தில் நடித்திருப்பது தமக்குப் பெருமையளிக்கும் விஷயம் என்றும் இது போன்ற சவால்கள் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தாம் எப்போதுமே தயார் என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்துப் பேசியுள்ள அவர், அடுத்து ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் தமிழ் சினிமா ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் போன்று திட்டமிட்டுச் செயல்படும் இயக்கு நரை தாம் இதுவரை பார்த்தது இல்லை என்றும் கோடம்பாக்கத்தில் தமது அடுத்த சுற்று ஒரு வெற்றியுடன் தொடங்கி உள்ளதாகவும் கங்கனா கூறுகிறார்.

மலையேற்றப் பயிற்சியில் ஜோதிகா

அண்மையில் இமயமலை பகுதிக்குச் சென்று அங்கு மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஜோதிகா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிப் பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில்தான் இன்ஸ்டகிராமில் இணைந்தார் ஜோதிகா. மலையேற்றப் பயிற்சி காணொளிதான் அவர் அதில் வெளி யிட்ட முதல் காணொளியாம். இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். நூறாயிரத்துக்கும் அதிகமானோர் அது பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது 'உடன்பிறப்பே' என்ற படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளது. கணவர் சூர்யாவின் ஒத்துழைப்பால்தான் தம்மால் பலவற்றைச் சாதிக்க முடிகிறது என்கிறார் ஜோதிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!