ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சிம்பு

திடீ­ரென தனது ரசி­கர்­களை ஒன்­று­தி­ரட்­டும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளார் சிம்பு. அவர் அர­சி­ய­லில் ஈடு­ப­டப்­போ­வ­தாக ஒரு பேச்சு கிளம்பி உள்­ளது.

இது­வரை தமது ரசி­கர்­களை, 'என் உயி­ரி­னும் மேலான ரசி­கர்­களே' என்று குறிப்­பி­டு­வ­து­தான் சிம்­பு­வின் வழக்­கம்.

இப்­போது அதில் சிறிய மாற்­றம் செய்து, 'மதிப்­பும் பேரன்­பும் கொண்ட என் ரத்­தத்­தின் ரத்­த­மான உற­வு­களே' என்று அழைக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்.

இதில் கூடு­தல் அன்­பும் நெருக்­க­மும் தெரி­வ­தாக ரசி­கர் கூட்­டம் நெகிழ்­கிறது.

வெங்­கட்­பி­ர­பு­வின் இயக்­கத்­தில் சிம்பு நடித்­துள்ள 'மாநாடு' தீபா­வளி பண்­டி­கை­யின்­போது திரை­காண உள்­ளது. இதில் நிறைய அர­சி­யல் பேசப்­பட்­டி­ருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யான நிலை­யில், ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் வகை­யில் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார் சிம்பு.

''நீண்ட நாளாக இயற்­கை­யின் செயல்­க­ளால், உங்­க­ளி­டம் நேர­டி­யாக உற­வா­டா­மல், தொலை­பேசி வாயி­லாக தொடர்பு கொண்­டோம்.

"இளை­ஞர் அணி, வழக்­க­றி­ஞர் அணி, மருத்­துவ அணி, தக­வல் தொழில்­நுட்­பப் பிரிவு அணி, கலை இலக்­ கிய அணி­யின் மூலம் மன்­றத்­தின் பணி­களை விரி­வு­ப­டுத்த உள்­ளோம்.

"ஆகை­யால் மாநில, மாவட்ட, வட்ட, பொறுப்­பா­ளர்­கள் நமது தலைமை அலு­வ­ல­கத்தை தொடர்பு கொண்டு கலந்துகொள்ள பணி­வன்­பு­டன் கேட்­டுக்கொள்­கி­றேன்,'' என்று தமது அறிக்­கை­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ரசி­கர்­க­ளு­ட­னான சந்­திப்­புக்கு நாள் குறித்த பிறகு அது­கு­றித்து அறி­விக்­கப்­படும் எனக் கூறி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து ஊட­கங்­க­ளி­லும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் சிம்­பு­வின் அர­சி­யல் பிர­வே­சம் என்ற தலைப்­பில் தொடர் விவா­தங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆனால், அவ­ருக்கு நெருக்­க­மான தரப்­பிலோ, சிம்­பு­வுக்கு அர­சி­ய­லுக்கு வரும் எண்­ணமே இல்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

ஊர­டங்கு அம­லுக்கு வந்த பிறகு ரசி­கர்­க­ளு­டன் அறவே பேச முடி­ய­வில்லை, அவர்­களை நேரில் சந்­திக்க முடி­ய­வில்லை என்­பது சிம்­பு­வுக்கு வருத்­தம் அளித்­துள்­ளது என்­றும் இந்த இடை­வெளி பெரி­தா­கி­வி­டக்கூடாது என அவர் கரு­து­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!