‘தினமும் சண்டை நடக்கும்’

"ஒரு பெண்­ணைப் புரிந்­து­கொள்­ளா­த­தால், முக்­கி­யத்­து­வம் கொடுக்­கா­த­தால் எத்­த­கைய விபத்து நேரும் என்­பதை 'பிசாசு-2' படத்­தில் சொல்லி இருக்­கி­றோம்," என்­கி­றார் இயக்­கு­நர் மிஷ்­கின்.

ஆண்ட்­ரி­யா­தான் இப்­ப­டத்­தின் நாயகி. படப்­பி­டிப்­பின்­போது இவ­ருக்­கும் ஆண்ட்­ரி­யா­வுக்­கும் இடையே சண்டை நடக்­காத நாளே இல்­லை­யாம். எனி­னும், அனைத்­தும் நல்ல நோக்­கத்­திற்­கான மோதல் என்­கி­றார்.

"நான் சொன்ன கதை­யைக் கேட்­ட­தும் தனக்­கான கதா­பாத்­தி­ரம் மிக­வும் பிடித்­தி­ருப்­ப­தா­கச் சொன்­னார் ஆண்ட்­ரியா. மேலும் இப்­படி ஒரு கதா­பாத்­தி­ரத்­தில், சிர­மப்­பட்டு நடிப்­ப­தற்கு அதிக சம்­ப­ளம் வேண்­டும் என்­றார். அதை வாங்­கிக் கொடுத்த பிற­கு­தான் படப்­பி­டிப்­பைத் துவங்­கி­னோம்.

"ஒரு நாளும் சண்டை வரா­மல் படப்­பிடிப்­பைத் தொடங்­கி­யது இல்லை. அதே­போல் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்ட பிறகு தின­மும் ஒரு வார்த்­தைப் போரே நடக்­கும்.

"அதற்கு கார­ணம் பெரி­தாத எது­வும் இருக்­காது. 'இந்­தக் கதா­பாத்­தி­ரம் அவ்­வ­ளவு வலி­யோடு பின்­னப்­பட்டு இருக்­கிறது. இந்­தக் கதா­பாத்­தி­ரம் என்­னைத் தொந்­த­ரவு செய்­கிறது. அத­னால்­தான் சண்டை போடு­கி­றேன்' என்­பார் ஆண்ட்­ரியா.

"நானும் பதி­லுக்கு, 'கவ­லைப்­ப­டாதே, நீ நன்­றாக என்­னு­டன் சண்டை போடு. நானும் திட்­டு­கி­றேன். முடி­வில் இரு­வ­ரும் ஒரு­வரை ஒரு­வர் நன்கு புரிந்­து­கொள்­வோம்' என்­பேன். "இப்­படி ஒவ்­வொரு நாளும் நல்ல அனு­ப­வத்­து­டன் பொழுது கழிந்­தது," என்­கி­றார் மிஷ்­கின்.

'பிசாசு' முதல் பாகத்­துக்­கும் இப்­போது உரு­வா­கும் 'பிசாசு 2'க்கும் எந்­தச் சம்­பந்­த­மும் கிடை­யா­தாம். யாரை நடிக்க வைக்­க­லாம் என்று யோசித்­த­போது ஆண்ட்­ரி­யா­தான் தன் நினை­வுக்கு வந்­த­தா­கச் சொல்­கி­றார். சில படங்­கள்­தான் உட­லோடு சேர்ந்து மன­தை­யும் வருத்­திச் செய்­கிற பட­மாக இருக்­கும். இது­வும் அப்­ப­டித்­தான்.

"இந்­தச் சமூ­கம் பெண்­ணைப் பிசா­சாக மாற்­று­கிறது. அவர்­க­ளின் அனைத்து சுதந்­தி­ரத்­தை­யும் பறித்­துக்­கொண்டு நிர்க்­க­தி­யாக விட்­டு­வி­டு­கி­றோம்.

"இங்கு ஆணுக்­குச் சொந்­த­மான ஒரு பொருள் என்­ப­தற்கு மேலே ஒரு பெண்­ணுக்கு அடை­யா­ளம் ஏதும் இல்லை. ஏன் இப்­படி இருக்க வேண்­டும்? ஒரு பெண் எப்­படி உடைந்து சித­று­கி­றாள் என்­ப­து­தான் இந்த ஒட்­டு­மொத்த பட­மும் சொல்­லும் கதை.

"இந்த உல­கில் ஒரு­வரை ஒரு­வர் பழி­வாங்­கு­வது மனி­தர்­கள் மத்­தி­யில்­தான் நடக்­கிறது. ஆனால் அதற்­கான பழியை பேய்­கள் மீது திணித்­து­விட்­டோம்," என்­கி­றார் மிஷ்­கின்.

'பிசாசு 2' படத்­தில் விஜய்­சே­து­பதி நடிக்­கி­றார் என்­பது கூடு­தல் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. சேது­பதி இந்­தப் படத்­தில் நடிப்­பது தாமே எதிர்­பா­ராத ஒன்று என்­கி­றார் மிஷ்­கின்.

"ஒரு நாள் நன்கு தூங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது உத­வி­யா­ளர்­கள் வந்­த­னர். நிமிர்ந்து பார்த்­தால் விஜய்­சே­து­ப­தி­யும் வந்­தி­ருந்­தார். 'வா மகனே' என்று பாசத்­து­டன் கட்டி அணைத்­தேன். விரி­வா­கப் பேசி­ய­போது 'சைக்கோ' படம் பார்த்­த­தா­க­வும் பத்து ஆண்­டு­க­ளாக என்­னு­டன் பணி­யாற்­றும் வாய்ப்பை இழந்­து­விட்­ட­தா­க­வும் சேது­பதி சொன்­னது வியப்பை அளித்­தது.

"ஒரு நடி­கன் இப்­ப­டிப் பேசு­வது எளி­தல்ல. தன்­னையே எரித்­துக்­கொண்டு பேசு­வ­தற்கு துணிவு வேண்­டும். சேது­பதி என்னை இப்­படி கொண்­டா­டி­ய­து­டன் நிற்­க­வில்லை. பத்து தினங்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் என்­னைத் தொடர்பு­கொண்டு பேசி­ய­போது, 'உங்­க­ளு­டன் இரண்டு நாள்­கள் தங்­கு­கி­றேன். உங்­க­ளு­டைய படத்­தில் ஒரு கதா­பாத்­தி­ரத்தை எனக்­காக உரு­வாக்­குங்­கள்' என்­ற­போது மறுக்க முடி­ய­வில்லை.

"இந்­தப் படத்­தில் சேது­பதி 16 நிமி­டங்­கள்­தான் திரை­யில் வரு­வார். அந்த குறு­கிய அவ­கா­சத்­தி­லும் பட்டை தீட்­டிய வைர­மாக ஜொலிப்­பார். சேது­பதி வந்­த­பி­றகு இந்­தப் படத்­துக்கு புதிய பரி­மா­ணம் கிடைத்­தது," என்­கி­றார் மிஷ்­கின்.

மூன்று ஜோடி­கள் ஒன்­று­சேர்ந்து சுற்­றுலா போகி­றார்­கள். ஆனால் அடுத்த ஆண்டே அதில் இரு ஜோடி­கள் விவா­க­ரத்து செய்ய முடி­வெ­டுக்­கி­றார்­கள்.

பிரி­யும்­போது மீண்­டும் சுற்­றுலா செல்ல வேண்­டும் என முடி­வா­கிறது. அப்­போது மூன்று ஜோடி­கள் ஆண்ட்­ரி­யா­வைச் சந்­திக்க நேரி­டு­கிறது. அதன்­பி­றகு நடப்­ப­து­தான் கதையாம்.

, :   

ஆண்ட்ரியா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!