திரைத் துளி­கள்

பதிலடி கொடுத்த அமலா பால்

பெண்களுக்கு தாங்கள் விரும்பியதைச் செய்யும் உரிமை உள்ளது என்கிறார் அமலா பால்.

அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது என்று சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் சில கவர்ச்சிப் படங்களை வெளியிட்டிருந்தார் அமலா. இது குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

மற்றொரு தரப்பினர் சினிமா வாய்ப்பு இல்லாததால் அமலா இப்படிச் செய்வதாக கிண்டல் செய்திருந்தனர். இதற்கு காட்டத்துடன் பதிலடி கொடுத்துள்ளார் அமலா பால்.

"எந்தப் பெண்ணும் தனது விருப்பப்படிதான் உடை அணிவாள். வாழ்க்கையையும் நகர்த்துவாள். அவள் அணியும் ஆடை குறித்துப் பேச யாருக்கும் உரிமை இல்லை. சமூக வலைத்தளத்தில் பெண்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள்," என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

'விசாவுக்காக திருமணம் செய்தேன்'

இங்கிலாந்து செல்ல விசா தேவைப்பட்டதால் அங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் இதில் தம்மிடம் குறைகாண ஒன்றும் இல்லை என்றும் நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் கூறியுள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரைத் திருமணம் செய்து கொண்டார் ராதிகா.

பின்னர் ஒரு பேட்டியில் விசாவுக்காகத்தான் இந்த திருமணம் நடைபெற்றது என்று இவர் கூறியது பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரைப் பிரிந்து இந்தியாவில் தனியாக இருப்பதாக என்னைப் பற்றி தகவல் பரவுகிறது. அது உண்மை அல்ல. விசாவுக்காகத்தான் பெனட்டிக்கை மணந்தேன். அதன் பிறகு எனது வேலையைச் செய்து வருகிறேன். தேவை ஏற்படும்போது சந்தித்துக் கொள்கிறோம். இது குறித்து பிறர் கருத்து தெரிவிக்கவோ குறைகூறவோ ஒன்றும் இல்லை," என்கிறார் ராதிகா ஆப்தே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!