காதல் ஜோடி பிரிந்தது

தெலுங்கு திரை­யு­ல­கில் முன்­னணி நட்­சத்­தி­ரங்­க­ளாக இருக்­கும் சமந்­தா­வும் நாக­சை­தன்­யா­வும் திரு­மண பந்­தத்­தில் இருந்து பிரி­வ­தாக அறி­வித்­துள்­ள­னர். இது தற்­பொ­ழுது திரை­யு­ல­கி­னரை அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி உள்­ளது.

சென்னை பல்­லா­வ­ரத்­தைச் சேர்ந்­த­வர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்­கில் முன்­னணி நடி­கை­யாக இருக்­கும் இவர், தெலுங்கு நடி­கர் நாக­சை­தன்­யாவைக் காத­லித்து 2017ல் திரு­ம­ணம் செய்­தார்.

நான்கு ஆண்­டு­

க­ளாக மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்த இரு­வ­ரும் பிரியப் போவ­தாக செய்­தி­கள் பர­வின. இதற்கு ஆரம்பப் புள்­ளி­யாக திரு­ம­ணத்­திற்குப் பின் சமூ­க­

வ­லைத்த­ளத்­தில் தனது பெயரை சமந்தா அக்­கி­னேனி என மாற்­றிய சமந்தா சில வாரங்க­ளுக்கு முன் 'எஸ்' என்று மாற்­றி­னார். அப்­போதே இவர்­கள் பிரி­யப்போவதாக பர­ப­ரப்பாக செய்திகள் வெளிவந்தன.

தொடர்ந்து சமந்தா தனித்து சுற்­றுலா சென்­றது, நாக­சை­தன்யா பட விழா­வில் பங்­கேற்­கா­தது, அவ­ருக்கு மட்­டும் வாழ்த்து தெரி­விக்­கா­மல் சாய் பல்­ல­விக்கு வாழ்த்து தெரி­வித்­தது, இந்தி நடி­கர் அமீர்­கா­னுக்கு

நாகார்­ஜுனா வைத்த விருந்­தில் பங்­கேற்­கா­தது என அடுத்­த­டுத்த நிகழ்­வு­கள் இவர்­கள் பிரி­வதை உறுதி செய்­வ­தா­கவே அமைந்­தது. ஆனால் இதுபற்றி நேர­டி­யாக இரு­வ­ரும் எது­வும் கருத்து கூறா­மல் இருந்­த­னர்.

இந்­நி­லை­யில் சமந்தா, நாக­சை­தன்யா

இரு­வ­ரும் தாங்­கள் பிரி­வ­தாக ஒரே மாதி­ரி­யான பதிவை இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டுள்­ள­னர். அதில், "நீண்ட ஆலோ­ச­னைக்­குக்­குப் பிறகு நாங்கள் பிரிந்து தனித்து வாழ முடிவு செய்­துள்­ளோம். 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாக நண்­பர்­க­ளாக இருப்­ப­தற்கு எங்­க­ளுக்கு வாய்ப்பு கிடைத்­தது. இந்தக் கடி­ன­மான நேரத்­தில் நண்­பர்­கள், நலம் விரும்­பி­கள், பத்­தி­ரிகை, ஊட­கங்­கள் எங்­க­ளின் தனிப்­பட்ட விஷ­யத்­திற்கு மதிப்­ப­ளிக்க வேண்­டும் என கேட்­டுக் கொள்­கி­றோம்," என்று பதி­விட்­டுள்ளனர்.

இலைமறை காய்போல இருந்து வந்த விவா­க­ரத்து செய்தியை இப்­படி பளிச்­சென்று இரு­வ­ரும் போட்டு உடைத்­தது திரை­யு­ல­கி­னரை கவ­லை­யில் ஆழ்த்தி இருக்­கிறது.

இது­பற்றி நாகார்­ஜுனா கூறு­கை­யில், "கனத்த இத­யத்­து­டன் இதை பகிர்­

கி­றேன். சமந்தா - நாக­சை­தன்யா இடையே ஏற்­பட்ட பிரிவு துர­திர்ஷ்­ட­

வ­ச­மா­னது. கண­வன், மனைவி இடையே நடக்­கும் விஷ­யங்­களில் தலை­யிட முடி­யாது. ஆனா­லும் இரு­வ­ரும் என்­னு­டைய பிரி­யத்­திற்­கு­ரி­ய­வர்­கள். சமந்­தாவை எப்­போ­தும் எங்­கள் குடும்­பம் ஆத­ரிக்­கும். அவர் எங்­கள் குடும்­பத்­தில் இருந்த ஒவ்­வொரு தரு­ணங்­களும் மறக்க முடி­யா­தது. இந்த நெருக்­க­டி­யான சூழ­லில் அவர்­க­ளுக்கு மன­

வ­லி­மையைக் கொடுக்க வேண்­டு­

கி­றேன்," என்று பதி­விட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில் நாகார்­ஜுனா குடும்­பத்­தி­னர் சமந்­தா­வுக்கு ரூபாய் 200 கோடி ஜீவ­னாம்­சம் கொடுக்க முன் வந்­த­தா­க­வும் ஆனால் 'தன்­னைப் பார்த்­துக்கொள்ள தனக்குத் தெரி­யும் என்­றும் ஜீவ­னாம்­சம் தேவை­யில்லை,' என்று சமந்தா

மறுத்ததாகவும் தெலுங்கு திரை­யு­லக வட்­டா­ரங்­கள் கூறி வரு­கின்­றன. இத­னால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!