அதிதியின் படப்பிடிப்பு பாதியில் நின்றது

நடி­கர் கார்த்தி, அதிதி ஷங்­கர் இணைந்து நடிக்­கும் 'விரு­மன்' என்ற திரைப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு மதுரை அருகே அண்­மை­யில் தொடங்­கி­யது. இந்­தப் படத்­தின்

படப்­பி­டிப்பை தொடர்ச்­சி­யாக தீபா­வளி வரை நடத்தி முடிக்க திட்­ட­மிட்­டி­ருந்­த­னர் படக்­ கு­ழு­வி­னர்.

படத்­தில் முக்­கிய வேடத்­தில் நடிக்­கும் பிர­காஷ்­ராஜ் ஆந்­தி­ரா­வில் நடி­கர் சங்க தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றார். அவரை எதிர்த்து மோகன்­பா­பு­வின் மகன் போட்­டி­யி­டு­வ­தால் இரு­வ­ரும் தீவி­ர­மாக தேர்­தல் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

தேர்­தல் பணி கார­ண­மாக படப்பிடிப்பில் பிர­காஷ் ராஜால் கலந்துகொள்­ள­ முடியவில்லை. பெரும்பாலான காட்சிகளில் பிரகாஷ் ராஜ் நடிப்பதால் அவர் இல்­லா­மல் படப்­பி­டிப்பு நடத்த முடி­யா­மல் போனது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதிக்கு 'விருமன்' படம்தான் முதல் படம். முதல் படமே இப்படி பாதியில் நின்றதைக் குறித்து வருத்தத்தில் இருக்கிறார் அதிதி. மது­ரை­யில் அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் செய்­தி­ருந்த படக்­குழுவும் வருத்தத்துடன் சென்னை திரும்பியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!