திரைத் துளிகள்

'டாக்டர்' படத்திற்கு போட்டியாக 'முகிழ்'

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டாக்டர்'. இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். மேலும் நாயகியாக பிரியங்கா மோகனும் வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே. புரடக்‌ஷன்ஸ்' நிறுவனமும் 'கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. வருகிற 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 'டாக்டர்' படத்துக்குப் போட்டியாக விஜய் சேதுபதியின் 'முகிழ்' படம் இம்மாதம் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் நாயகியாக ரெஜினா நடித்துள்ளார். மேலும் நடிகர், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். புதுமுக இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

விஷாலுக்கு நிச்சயிக்கப்பட்ட அனிஷா வேறொருவரை மணந்தார்

நடிகர் விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இருவருமே தாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று கூறி வந்தனர். அதையடுத்து 2019ஆம் ஆண்டில் அனிஷா என்ற பெண்ணுடன் விஷாலுக்கு ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு விஷால்-அனிஷா திருமணம் நிச்சயதார்த்தத்தோடு முடிவு பெற்றுவிட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து விஷாலும் அதை ஒத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது அனிஷா அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடையில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகிய 'எனிமி' படம் ஆயுத பூஜையன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வந்தன. தற்பொழுது படத்தின் வெளியீட்டை நவம்பர் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறது படக்குழு. அதிரடி சண்டைப் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!