‘வருகிறார் கள்ளபார்ட்’

வித்­தி­யா­ச­மான, கன­மான கதா­பாத்­தி­ரங்­கள் என்­றால் உடனே ரெஜினா கஸான்ட்­ரா­வின் பக்­கம்­தான் இயக்­கு­நர்­க­ளின் பார்வை திரும்­பு­கிறது. அவ­ரும் நடிப்­பில் குறை­வைப்­பதே இல்லை.

'கள்­ள­பார்ட்' படத்­தின் இயக்­குர் ராஜ­பாண்­டி­யும் இந்­தப் பாராட்டை வழி­மொ­ழி­கி­றார்.

"இந்­தப் படத்­தில் அர­விந்த்­சாமி நாய­கன் என்­றால், ரெஜி­னா­தான் நாயகி. ஆனால் இரு­வ­ரும் ஜோடி­யல்ல. ஆனால் இரு­வ­ருமே தத்­த­மது பாணி­யில் அசத்­த­லாக நடித்­துள்­ள­னர்," என்­கி­றார் ராஜ­பாண்டி.

கிட்­டத்­தட்ட நான்கு ஆண்­டு­க­ளாக தயா­ரிப்­பில் உள்­ளது இந்­தப் படம். 90 விழுக்­காடு படப்­பி­டிப்பை முடித்­தி­ருந்த வேளை­யில்­தான் கொரோனா விவ­கா­ரம் தலை­தூக்­கி­ய­தாம்.

அத­னால், படப்­பி­டிப்பு பாதிக்­கப்­பட்­டது. இத­னால் விரக்­தி­யின் உச்­சத்­துக்கே போய் வந்­த­தாகச் சொல்­கி­றார் இயக்­கு­நர்.

"பத்து நாள்­கள் படப்­பி­டிப்பு நடந்­தால், அடுத்த சில தினங்­களில் படத்தை வெளி­யிட்­டு­வி­ட­லாம் என்று இத்­தனை நாள்­க­ளாக காத்­தி­ருந்­தோம். இடை­யில் ஒரு கட்­டத்­தில் தொடர்ந்து படங்­களை இயக்­க­லாமா வேண்­டாமா? புதுப்­பட வேலை­களைத் தொடங்­க­லாமா? 'கள்­ள­பார்ட்' முழு­மை­ய­டை­யுமா என மன­தில் பல்­வேறு கேள்­வி­கள் எழுந்­தன.

"ஒரு­வ­ழி­யா­கப் பட வேலை­கள் மீண்­டும் தொடங்­கி­ய­போது, 'தலைவி' படத்­தில் நடிப்­ப­தற்­காக அர­விந்த்­சாமி தன் தோற்­றத்­தை­யும் சிகை­ய­லங்­காரத்­தை­யும் மாற்றி இருந்­தார். ரெஜி­னா­வும் வேறு படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருந்­தார். இப்­ப­டியே இரண்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன.

"இயக்­கு­ந­ரான எனக்கே மனக்­கஷ்­டம் அதி­கம் என்­றால், தயா­ரிப்­பா­ள­ரின் நிலை­மையை யோசித்­துப் பாருங்­கள். எனவே திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­குமா அல்­லது 'ஓடிடி' வெளி­யீடா என்­பதை அவர்­தான் முடிவு செய்­வார்," என்­கி­றார் ராஜ­பாண்டி.

'கள்­ள­பார்ட்' என்ற தலைப்பைத் தேர்வு செய்ய என்ன கார­ணம் என்று பல­ரும் கேட்­கி­றார்­க­ளாம். அதற்கு எளி­மை­யாக விளக்­கம் அளிக்­கி­றார்.

"கள்­ள­பார்ட் என்­றால் திரு­ட­னா­க­வும் இருக்­க­லாம் அல்­லது திரு­டன் வேடம் போடு­கி­ற­வ­ரா­க­வும் இருக்­கக்­கூ­டும். இப்­ப­டி­யொரு சிக்­க­லான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் கதை நாய­கன் அர­விந்த்­சாமி. அவ­ருக்கு இதில் கணினி வன்­பொருள் நிப­ணர் வேடம்.

"அந்­தக் கால மேடை நாட­கங்­களில், 'ராஜ­பார்ட்', 'ஸ்தி­ரீ­பார்ட்', 'கள்­ள­பார்ட்' என்­று­தான் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளைக் குறிப்­பி­டு­வார்­கள். அங்­கி­ருந்­து­தான் இந்­தத் தலைப்பைத் தேர்வு செய்­தேன். அர­விந்த்­சாமி எப்­ப­டிப்­பட்­ட­வர் என்­பதை உட­ன­டி­யா­கத் தீர்­மானிக்க இய­லாது.

'கள்­ள­பார்ட்' படத்தை தொடங்­கி­ய­போது ரெஜினா சரா­சரி நாய­கி­யாக பல படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருந்­த­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அவ­ரது திற­மை­யின் மீது நம்­பிக்கை வைத்து, தனது கதை­யின் நாய­கி­யாக தேர்வு செய்­தா­ராம் ராஜ­பாண்டி.

"கடந்த 2018ல் ரெஜி­னாவை சந்­தித்­துக் கதை சொன்­ன­போது, அவ­ருக்கு மிக­வும் பிடித்­துப்­போ­னது. அச்­ச­ம­யம் நாய­க­னின் காதலி, காதல் பாடல் என்று வழக்­க­மான கதை­களில் நடித்து வந்­தார். அதன் பிறகு பல்­வேறு வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடத்தி அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்தி உள்­ளார்.

"ஆனால் எத்­தனை கதை­கள், கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தா­லும் 'கள்­ள­பார்ட்' படம் அவ ரது திரை­வாழ்க்­கை­யில் மிக முக்­கி­ய­மான பட­மாக இருக்­கும். இதில் ஜும்பா நடன ஆசி­ரி­யை­யாக நடித்­துள்­ளார். இப்­பாத்­தி­ரத்­துக்கு ரெஜி­னாவை தவிர யாரும் பொருத்­த­மாக இருக்க வாய்ப்­பில்லை.

"அதே­போல் அர­விந்த்­சாமி­யும் அனு­பவ நடி­கர் எனும் பந்தா இல்­லா­மல் பேசிப் பழகி­னார். படப்­பி­டிப்பு தொடங்­கிய இரண்டே நாள்­களில் மொத்த படக்­கு­ழு­வுக்­கும் அவர் நண்­ப­ராக மாறிப்­போ­னார். அவ்­வப்­போது சில கருத்­து­கள், ஆலோ­ ச­னை­க­ளைப் பகிர்ந்து கொள்­வார். கதை­யில் தலை­யி­ட­மாட்­டார்்," என்­கி­றார் ராஜ­பாண்டி.

, :   

ரெஜினா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!