‘ஹீரோ ஹீரோ’தான்

திரைப்பட கதாநாயகர்களில் சிலர் நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்கள் பின்பற்றக்கூடிய வகையில் வாழ்ந்து காட்டுவார்கள். அந்த வகையில் இறக்கும் தருவாயில் இருக்கும் தன்னுடைய ரசிகரின் ஆசையை நிறைவேற்றி தான் நிஜத்திலும் உண்மையான 'ஹீரோ'தான் என்று நிரூபித்து இருக்கிறார் தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர்

என்.டி.ஆர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜோலு பகுதியைச் சேர்ந்த முரளி எனும் வாலிபர், ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகராவார். ஆனால், முரளி கடந்த வாரம் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தற்போது விஜயவாடாவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இவரின் இரண்டு சிறுநீரகங்களும் விபத்தினால் செயலிழந்து போனது. அவசர சிகிச்சைப் பிரிவில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், முரளி, தான் உயிருடன் இருக்கும்போதே தனது அபிமான நாயகனான ஜூனியர் என்.டி.ஆரைப் பார்த்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவர்கள் முன் வைத்துள்ளார். இது குறித்து தகவல்கள் வெளியாயின.

இதனை அறிந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நேற்று முன்தினம் முரளியின் கைத்தொலைபேசி வாயிலாக காணொளி மூலம் பேசினார்.

தனது அபிமான நடிகர் தன்னைத் தொடர்புகொண்டு பேசுகிறார் என்பதை அறிந்த முரளி, தான் பிறந்ததற்கான பிறவிப் பயனை அடைந்ததுபோல் உணர்ந்து மிகவும் ஆர்வமுடன் ஜூனியர் என்.டி.ஆருடன் கண்ணீர் விட்டு பேசினார்.

"விரைவில் உடல் குணமாகி வீடு திரும்புவீர்கள். பயப்பட வேண்டாம்," என்று முரளிக்கு தைரியத்தை ஊட்டும் வகையில் பேசி, மருத்துவ செலவிற்கும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார் ஜூனியர் என்.டி.ஆர். இந்தக் காணொளி வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் பாராட்டி, பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களால்தான் நாம் எனும் அடிப்படை உண்மையை சில நடிகர்கள் மறவாமல் உள்ளனர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஜூனியர் என்.டி.ஆர். பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜ்ஜுடன், இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்துள்ள 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் ஒரு தொலைக்காட்சியில் இவர் 'யார் உங்களில் கோடீஸ்வரர்' எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அண்மையில் விவாகரத்து என்று அறிவிப்பை வெளியிட்ட பிறகு சமந்தா முதல் முறையாக அந்தத் தொலைக்காட்சியில் 'எவரு மீலோ கோடீஸ்வருடு' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்னா அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்.டி.ஆர். கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, ரூ.25 லட்சம் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம் சரண், கொரட்டல்ல சிவா உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!