திரைத் துளி­கள்

'வதந்திகள் என்னை உடைக்காது'

"என் சொந்த பிரச்சினையில் ரசிகர்கள் காட்டிய அக்கறையும் அவர்களுடைய உணர்வுகளும் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது," என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

தம்மைப் பற்றி சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட வதந்தி கள், பொய்க் கதைகளுக்கு ரசிகர்கள் தெரிவித்த எதிர்ப்புக்காகவும் அனுதாபத் துக்காகவும் தாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ள தாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

"முதலில் வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றார்கள். தற்போது நான் கருக்கலைப்பு செய்ததாக கூறுகின்றனர்.

"விவாகரத்து என்பது பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்த கடினமான நேரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகிறது. சத்தியமாகச் சொல்கிறேன், இவையெல்லாம் எந்த வகையிலும் என்னை உடைக்காது," என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.

'உருவக் கேலி மனதைப் பாதித்தது'

உருவக் கேலியால் தாம் பாதிக்கப்பட்டதாகச் சொல்கி றார் பிரியங்கா சோப்ரா.

முப்பது வயதாகும் வரை அதுகுறித்து தாம் கவலைப் படவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சிலர் என்னிடம் வெளிப்படையாகப் பேசும் போது, 'உங்களுக்கு வயதாகிறது' எனக் கூறத் தொடங்கிய பிறகுதான் என் மனம் பாதிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கில் பலர் என்னைக் கிண்டல் செய்யத் தொடங்கினர்.

"இதனால் சமூக ஊடகங்களுடனான என்னுடைய உறவு மாறியது. இணையத்துடனான என்னுடைய உறவையும் மாற்றி அமைத்தேன். "என்னை நானே பாதுகாத்துக் கொண்டேன். என் உடலுக்கு எதெல்லாம் தேவையோ அவற்றை ொடுத்தேன். நள்ளிரவு ஒரு மணிக்கு பீட்சா சாப்பிடுவதாக இருந்தாலும்கூட அதைச் செய்தேன்," என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!