திரைத் துளிகள்

கன்னட நடிகர் சத்யஜித் மரணம்

கன்னடத் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சத்யஜித். தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். சுமார் 650 படங்களில் நடித்திருக்கும் சத்யஜித் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திங்கட்கிழமை அவரின் நிலைமை மோசமானதால் பெங்களூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

நஷ்ட ஈடு வழங்கினார் சூர்யா

சூர்யா தயாரிப்பில் வெளியான படம் 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'. படத்தை அரிசில் மூர்த்தி இயக்கி இருந்தார். இந்தப் படம் 2016ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் 'ரங்கா படாங்கா' படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியான பிறகுதான் இதுபற்றி சூர்யாவுக்கு தெரிய வந்துள்ளது. அதனால் கோபத்துக்கு ஆளான சூர்யா இயக்குநரை அழைத்து எச்சரித்ததோடு, மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடாக பெரும் தொகையை வழங்கி இருக்கிறார். இந்தியாவிலேயே நஷ்ட ஈடு வழங்கியது இதுதான் முதல் தடவை என்று பலரும் சூர்யாவைப் பாராட்டி வருகின்றனர்.

'சிவன் பெயர்தான் கிடைத்ததா தனுஷ்?'

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. அந்தப் படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. "திருச்சிற்றம்பலம்' என்பது சிவனின் பெயர். அந்தப் பெயரை எப்படி படத்தின் தலைப்பாக வைக்கலாம்? இதுவே வேறு மத கடவுளின் பெயரை இப்படித் தலைப்பாக வைப்பீர்களா தனுஷ்?" என்று இந்து அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!