இருமுகத்துடன் இன்முகம் ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை

அழகு, கவர்ச்சி என்ற இருமுகத்துடன், இன்முகம் காட்டி நடித்து வருவதாகக் கூறப்படும் நிதி அகர்வால், தமிழ், தெலுங்குத் திரையுலகில் நிச்சயம் ஒரு பெரிய சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் படித்து, வளர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல். 'முன்னா மைக்கேல்' என்ற இந்திப் படத்தில் அறிமுகமான இவரை டோலிவுட் இயக்குநர்கள் வரவேற்க அங்கு பறந்தார். 'சவ்யசாச்சி', 'மிஸ்டர். மஜ்னு', 'ஐஸ்மார்ட் சங்கர்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் இன்றைய நிலையில் டோலிவுட்டின் கவர்ச்சி ராணியாக வலம் வருகிறார். 'ஈஸ்வரன்', 'பூமி' தமிழ்ப் பட வாய்ப்புகளுக்குப் பிறகு கோலிவுட்டில் புது வாய்ப்புகளைப் பெற கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ேரயா, கடந்த 2018ல் ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ கோச்சேவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பார்சிலோனாவில் குடியேறினார். இந்நிலையில், ஸ்ரேயா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து, "எங்களுக்கு அழகான தேவதையைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி," என்று பதிவிட்டுள்ளார். குழந்தையுடன் இருக்கும் காணொளியை வெளியிட்டுள்ள ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறந்து பல நாட்களான நிலையில் இப்போதுதான் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

நிதி அகர்வால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!