‘பெண்களின் மிகப்பெரிய ஆயுதம் மௌனம்’

ஜோதி­கா­வின் 50வது பட­மான 'உடன்­பி­றப்பே' அண்­மை­யில் 'அமே­சான் பிரைம் வீடியோ'வில் வெளி­யாகி உள்­ளது. அண்­ணன் - தங்கை பாசத்தை சொல்­லும் கதை. மற்­றொரு 'கிழக்குச் சீமை­யிலே' ராதி­கா­வாக ரசி­கர்­க­ளின் நெஞ்­சில் பதிந்துவிட்­டார் ஜோதிகா.

இந்­தப் படத்­தில் ஜோதிகா, சசிக்­கு­மார், சமுத்­தி­ர­கனி, சூரி என அனை­வ­ரும் தங்­க­ளின் கதா­பாத்­தி­ரங்­களில் மிக அற்­பு­த­மாக நடித்­துள்­ள­னர். இமான் இசை­ய­மைத்­துள்ள இந்­தப் படத்தை இரா.சர­வ­ணன் இயக்கி, சூர்­யா­வின் '2டி என்­டர்­டைன்­மென்ட்' நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது.

ஜோதிகா, அசல் கிரா­மத்துப் பெண்­ணாக நடித்­துள்ள இரண்­டா­வது படம் இது.

இதற்கு முன் 'டும் டும் டும்' படத்­தில் குறும்­புக்­கார கிரா­மத்துப் பெண்­ணாக நடித்­தி­ருப்­பார். அது­வும் பாதி படத்­திற்கு மேல் நாகரிக உடை­யில் மாறிவிடு­வார். இருந்­தா­லும் நெல்­லைத் தமிழை அழ­காக பேசி நடித்­தி­ருப்­பார் ஜோதிகா.

அதற்குப் பிறகு 'உடன்­

பி­றப்பே' படம் முழு­வ­தும்

கிரா­மத்து மொழி­ பேசி,

கிரா­மத்துப் பெண்­ணா­கவே வாழ்ந்­தி­ருக்­கி­றார்.

இந்த வேடத்­தில் தான் நடிப்­ப­தற்கு எடுத்துக்காட்டாக இருந்­தது யார்? தனது கதா­பாத்­தி­ரம் எப்­படி? என்­பது பற்றி அண்­மை­யில் ஜோதிகா பத்திரிகையாளரிடம் பேசிய போது, "இந்த வேடத்­தில் நடிப்­ப­தற்­காக நிஜ வாழ்க்­கை­யில் நான் சந்­தித்த நிறைய பேரி­டம் இருந்து நடை, உடை, பாவ­னைகளைக் கற்­றுக் கொண்­டேன்.

"இந்த கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­ப­தற்கு மிகப் பெரிய ஊக்­க­சக்­தி­யாக இருந்­தது எனது மாமி­யார்­தான்.

"ஒரு குடும்பத் தலை­வி­யி­டம் இருக்க வேண்­டிய அனைத்து விஷ­யங்

­க­ளை­யும் அவ­ரி­டம் இருந்து கற்­றுக்­கொண்­டேன்.

"எனது கண­வ­ரின் ஒட்­டு­மொத்த உற­வி­னர்­களும் கோவை­யைச் சுற்றி உள்ள சிறிய கிரா­மங்­க­ளில்­தான் இருக்­கி­றார்­கள்.

திரு­ம­ணத்­திற்குப் பிறகு இந்த 15 ஆண்­டு­களில் நான் சந்­தித்த மற்ற பெண்­க­ளி­டம் இருந்து நிறைய விஷ­யங்­களைத் தெரிந்து கொண்­டேன். குடும்­பத்­தில் உள்ள பெண்­க­ளி­டம் பேசு­கை­யில் கற்­றுக்கொண்ட நிறைய விஷ­யங்­களை இந்தக் கதா­பாத்­தி­ரத்­திற்­குப் பயன்­ப­டுத்­திக் கொண்­டேன்.

"இதுபோன்ற வேடத்­தில் இது­வரை நான் நடித்­த­தில்லை. பல­வி­த­மான வய­து­டைய வேடங்களில் நடித்­துள்­ள­தால் ஒரு நிறை­வான, முழுமை அடைந்த திருப்தி கிடைக்­கிறது. பெண்­க­ளின் மிகப் பெரிய பலத்தை இந்தப் படத்­தில் நான் காட்டி உள்­ளேன். அது­தான் மெள­னம்.

"கார­ணம் 90 விழுக்­காட்­டுப் பெண்­கள் மெள­ன­மா­கத்­தான் வாழ்­கி­றார்­கள். ஆனால் அவர்­கள் வலி­மை­யா­ன­வர்­கள். அவர்­க­ளின் மெள­னம்­தான் அவர்­க­ளின் மிகப் பெரிய பலம். அது­தான் இந்த கதா­பாத்­தி­ரத்­திற்கு மிகப் பெரிய அழகு. நான் நடித்­த­தி­லேயே மிக அழ­கான, அற்­பு­த­மான வேடம் இது­தான்," என தெரி­வித்­துள்­ளார் ஜோதிகா.

'மாயாவி' படத்­தில் நடி­கர் சத்­யன், "100 ரூபாய் கொடுத்­தால் 1,000 ரூபாய்க்கு

நடிப்­பி­யாமே?" என ஜோதி­காவை கிண்­டல் செய்­தி­ருப்­பார். அப்­ப­டிப்­பட்ட ஜோதி­காவே மாமி­யா­ரி­டம் இருந்­தும் உற­வுக்­கார பெண்­க­ளி­டம் இருந்­தும்­தான் தனது கதா­பாத்­தி­ரத்­திற்காக நிறைய கற்­றுக்­கொண்­டேன் என சொல்லி இருப்­பது பல­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

'2டி என்­டர்­டைன்­மென்ட்' நிறு­வ­னம்,

'அமே­சான் பிரைம் வீடியோ'வுடன் கையெ­ழுத்­திட்ட நான்கு படத்­திற்­கான ஒப்­பந்­தத்­தில் இரண்­டா­வ­தாக வெளி­யாகி உள்ள படம்

'உடன்­பி­றப்பே'.

ஏற்கெனவே செப்­டம்­பர் மாதம் 'ராமே ஆண்­டா­லும் ராவணே ஆண்­டா­லும்' படம் அமே­சா­னில் வெளி­யா­னது. நவம்­ப­ரில் 'ஜெய் பீம்' பட­மும் டிசம்­ப­ரில் 'ஓ மை டாக்' பட­மும் வெளி­யாக உள்­ளன.

திருமணத்திற்குப் பிறகு தங்கள் வாழ்க்கைத் துணைகளால் அண்ணனும் தங்கையும் பிரிவதை 'பாசமலர்' காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கிராமத்துப் பின்னணியைப் பார்க்கும்போது 'கிழக்குச் சீமையிலே' நினைவுக்கு வருகிறது. சட்டப்படி வாழ நினைக்கும் கணவருக்கும் தர்மப்படி வாழ நினைக்கும் அண்ணனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பெண்ணின் பாசப்போராட்டம்தான் 'உடன்பிறப்பே'.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!