'அண்ணாத்த' திரைப்படம் அமெரிக்காவில் 550 திரைகளில் வெளியீடு காண உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அதிலும், பெரும்பாலான திரையரங்குகளில் தினமும் மூன்று காட்சிகள் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை எந்த தென்னிந்திய படத்துக்கும் இந்த எண்ணிக்கையிலான திரைகள் கிடைத்ததில்லை என்கிறார்கள்.
இந்தி நடிகர் அக்ஷய் குமாரின் அண்மைய படம் அமெரிக்காவில் வெளியானபோது சில திரையரங்குகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அங்கு சென்று படம் பார்க்குமாறு ரசிகர்களுக்கு அவர் அன்பு வேண்டுகோள் விடுக்கும் காணொளிப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.
இதற்கு நல்ல வரேவற்பு கிடைத்ததை அடுத்து, 'அண்ணாத்த' படத்துக்காக ரஜினியையும் அவ்வாறு பேச வைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், திடீரென அவரது உடல்நலம் குன்றியிருப்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.