மதுபான விளம்பரத்தில் கணவருடன் இணைந்து நடித்த காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்றார் காஜல். அவர் கடைசியாக நடித்த ஒன்றிரண்டு படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை யையொட்டி மதுபான நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்த அவருக்கு கண்டனம் எழுந்துள்ளது.
அந்த விளம்பரத்தில் தம் கணவருடன் இணைந்து நடித்துள்ளார் காஜல். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, 'பொறுப்புள்ள ஒரு நடிகை இத்தகைய விளம்பரங்களில் நடிக்கலாமா' என ரசிகர்கள் பலர் பின்னூட்டமிட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் நல்ல கருத்துகளைப் பறப்புவதில் காஜல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிலர் அறிவுறுத்தி உள்ளனர்.