குழந்தை நட்சத்திரம், உதவி
இயக்குநர், இயக்குநர், நடனக் கலைஞர், நடன இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் இப்படி பல துறைகளில் சிறப்பாக விளங்கும் ஒரே நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன்தான்.
அவருக்கு நேற்று 67வது பிறந்தநாள். அதனை அவருடைய ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி
வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்கள் மனதில் சிம்மா
சனம் போட்டு அமர்ந்திருக்கும் ஒரே நடிகர் கமல்ஹாசன்.
நடிகர் கமல்ஹாசன் இந்தியத் திரையுலகின் மிகத் திறமையான, சிறந்த நடிகர்களில் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக 1959ல் 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அனாதைச் சிறுவனாக அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்
திலேயே அதிபர் கையால் தங்கப் பதக்கத்தை வென்றவர். 5 வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், ஆகஸ்ட் 12 திரையுலகில் அடி
யெடுத்து வைத்து 62 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடினார்.
கமல்ஹாசனின் உண்மையான பெயர் பார்த்தசாரதி, அவர் பரமக்குடியில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சீனிவாசன் வழக்கறிஞர். அவரது தாயார் இல்லத்தரசி. இவர் 5வது மகனாகப் பிறந்தார்.
இந்திய சினிமாவின் ராபர்ட் டி நீரோ என்று கருதப்படுகிறார் கமல். இவர் தன்னுடைய இளம் பருவத்தில் இருந்தே நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பாலும் ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ நடிப்பாலும்
ஈர்க்கப்பட்டவர்.
கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம்
மற்றும் இந்தி மொழிகளில் 19க்கும் மேற்பட்ட பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். 'விஸ்வரூபம்' படத்திற்காக, தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான 'தேவர் மகன்' திரைப்படம் 5 தேசிய
விருதுகளைப் பெற்றுள்ளது. இதைத் தவிர 'மூன்றாம் பிறை', 'நாயகன்', 'இந்தியன்' ஆகிய படங்
களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் மூன்று முறை பெற்றுள்ளார். 2016ல் பிரெஞ்சு
அரசாங்கம் கமலுக்கு இந்தியத் திரையுலகில் சிறப்பான பங்களிப்பிற்காக 'செவாலியர்' விருதை வழங்கிக் கௌரவித்தது.
சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் உறுப்பு தானம் செய்ய முதலில் உறுதியளித்த இந்திய நடிகர்களில் கமல்ஹாசனும்
ஒருவர்.
1997ல் டைம் இதழ் கமல் நடித்த 'நாயகன்' படத்தை, எல்லா காலத்திலும் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்
பிடத்தக்கது.
கமல் நல்ல ஒப்பனைக்
கலைஞரும்கூட. ஒப்பனைக் கலையைக் கற்க இவர் அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது.
2008ல் கமல் நடிப்பில் வெளியான 'தசாவதாரம்' படத்தில், 10 வேடங்களில் நடித்து ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார். சிவாஜி 'நவராத்திரி' படத்தில் 9 வேடங்களில் நடித்திருந்தார். எனவே அதிக வேடங்களில் நடித்த பெருமை இவரையேச் சேரும்.
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்தவர் கமல். 2000ஆம் ஆண்டில், கமல் ஃபிலிம்பேருக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது, அவரை இனி விருதுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் திரைப்படத் துறையில் இளம் திறமைகளை அங்கீகரிக்கும் குழுவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய 63 வயதில், கமல் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் துவங்கி தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்ட இவர், தற்போது வரை மனதில் படும் அரசியல் கருத்துகளை உரக்க பேசி வருகிறார்.
தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் கட்சி உறுப்பினர்
களிடம் "மநீம உறவுகளே, சென்னை மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும்," என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபலங்களின் பிறந்தநாள் அன்று அவர்கள் நடித்த படங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருவது தற்போது புதிய நடைமுறையாக இருக்கிறது. அந்த வகையில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'விக்ரம்' படத்தின் சுவரொட்டியை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறது படக்குழு.
அந்தச் சுவரொட்டியின் பின்னணியில் தீ பறக்க, கையில் துப்பாக்கியைக் காதலுடன் பிடித்திருக்கிறார் கமல். மேலும் நேற்று மாலை படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டிருக்கிறார்.
அத்துடன் கமல் நடிக்க இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்காக கமல்ஹாசன் 100 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அவருடைய ரசிகர்
களுக்கு ஊக்கத்தை அளித்து பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
அவருடைய பிறந்த நாளுக்கு திரைப் பிரபலங் களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து களைப் பதிவிட்டு வருகின்றனர்.