சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் அமலா நாகார்ஜுனா.
'கணம்' என்ற தலைப்பில் உருவாகி வரும் அப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார். அம்மா, மகன் பாசத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளனர். சர்வானந்த் மகனாகவும் அமலா தாயாகவும் நடிக்கின்றனர்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். விரைவில் இப்படம் திரைகாண உள்ளது.