தினமும் ஏதாவது ஒரு புது விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என்கிறார் இளம் நாயகி மிர்ணாளினி.
தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்கள் புறக்கணிக்கப் படுவதாகக் கூறப்படுவதை தம்மால் ஏற்க இயலாது என்றும் கூறியுள்ளார்.
"இன்றைய சூழலில் பெரும்பாலான படங்கள் ஒரே சமயத்தில் பல்வேறு மொழி களில் வெளியீடு காண்கின்றன. எனவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் கதை அமைத்து, நடிகர்களையும் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். அதற்காக தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகக் கூறுவதை ஏற்கமாட்டேன்," என்று சொல்லும் மிர்ணாளினி, தற்போது 'கோப்ரா', 'ஜாங்கோ' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சூர்யாவும் இயக்குநர் சிவாவும் கூட்டணி அமைக்க உள்ளனர். இந்தப் புதுப்படத்துக்கான பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது. சூர்யாவை இயக்கி முடித்த கையோடு, விஜய்யுடன் அவர் இணைவார் எனக் கூறப்படுகிறது. அண்மையில் விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னதாக வும் அவருக்கு கதை மிகவும் பிடித்துப்போனது என்றும் அண்மைய பேட்டியில் சிவா குறிப்பிட்டு இருந்தார். விஜய் நடித்த 'பத்ரி' படத்தில் இவர் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே நல்ல நட்பு நிலவி வருகிறதாம்.
மன்னர் காலத்துப் பெண் களைப் போல் உடையணிந்து அழகிய ஒப்பனையுடன் காட்சியளிக்கும் புகைப் படங்களை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள் ளது. இந்நிலையில் போர் வீராங்கனையாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் எனும் தமது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
"ஒருவேளை சில தலைமுறைகளுக்கு முன்பே பிறந்து இருந்தால் போர் வீராங்கனையாகத்தான் இருந்திருப்பேன். எனக்கு இளவரசியாகவோ மகாராணியாகவோ இருப்பதில் விருப்பமில்லை. போர்க்குணத்துடன் செயல்படுவதையே விரும்புகிறேன்," என்கிறார் மாளவிகா.
கவர்ச்சியாக நடிப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என்கிறார் அமலா.
தாம் இதுவரை கவர்ச்சி யான கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்திருப்பதாகக் கூறப்படுவதை ஏற்பதாகச் சொல்கிறார்.
"யாரும் தவறாக எதையும் சொல்லிவிடவில்லை. அதே சமயம் சில சவாலான பாத்தி ரங்களையும் ஏற்றுள்ளேன். என்னைக் குறை கூறுபவர், அவற்றில் சிறப்பாக நடித்திருப்பதாக இதுவரை மனம் திறந்து பாராட்டியதில்லை," என்கிறார் அமலா.
தற்போது சொந்தமாகப் படம் தயாரித்து வருகிறார்.
'நவரசா' ஆந்தாலஜி படத்துக்காக இயக்குநர் பொன்ராம் ஒரு பகுதியை இயக்கி இருந்தாராம். அதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். ஆனால் படத்தில் இந்தப் பகுதி மட்டும் இடம்பெறவில்லை. "இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கான உண்மையான காரணம் என்னவென்று தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும். படத்தின் ஒலியில் பிரச்சினை இருப்பதாக மணி சார் சொன்னார். ஆனால், அந்த விளக்கம் எனக்குத் திருப்திகரமாக இல்லை. எங்கள் படம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று இன்றுவரை எனக்குத் தெரியாது," என்கிறார் பொன்ராம்.
'ஓடிடி' தளத்தில் நேரடியாக திரைப்படங்களை வெளியிட ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லாலின் அடுத்த ஐந்து படங்கள் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'அன்புச்செல்வன்' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் தாம் நடிக்கவில்லை என்கிறார் கௌதம் மேனன். ஆனால் படக்குழுவினரோ, அவர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து தயாரிப் பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் கௌதம் மேனன்.