எதிர்பார்த்த படவாய்ப்புகள் அமையாவிட்டாலும் அமலா பால் மனம் தளர்ந்துவிடவில்லை. சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளார்.
அமலாவின் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் 'கடாவர்'. தீபாவளிக்கு வெளியாகும் எனக் கருதப்பட்ட நிலையில், படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை மட்டும் அண்மையில் வெளியிட்டனர் இப்படக்குழுவினர்.
முதன்முறையாக தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்துள்ளார் அமலா. இதற்காக சம்பந்தப்பட்ட துறைசார்ந்த நிபுணர்களை நேரில் சந்தித்துப் பல விவரங்களைச் சேகரித்தாராம்.
சில காட்சிகளில் தமது நடிப்பு இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக இத்தகவல்களை தேடிப் பெற்றதாகச் சொல்கிறார் அமலா. அனூப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதுல்யா ரவி, ரித்விகா ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.