புற்றுநோயில் இருந்து மீண்டு வருவது கடினமானதொரு பயணம் என்று நடிகை மனீஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், புற்றுநோய் பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"நானும் இக்கடின பயணத்தை கடந்து வந்துள்ளேன். நாம் அந்நோயைவிட கடினமானவர்கள். இந்தச் சூழ்நிலையை எதிர்க்கத் துணிந்தவர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். வென்றவர்களுடன் கொண்டாட விரும்புகிறேன்," என்கிறார் மனீஷா.