ராஷி கண்ணா 2018ஆம் ஆண்டு வெளியான 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் காலடி வைத்தார். பின்னர் 'அடங்கமறு', 'அயோக்யா', 'சங்கத்தமிழன்', 'அரண்மனை 3' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இவர் தற்பொழுது 'மேதாவி', 'சைத்தான் கா பச்சா', 'சர்தார்', 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ராஷி கண்ணா ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கிய
'அரண்மனை 3' படத்தில் நாயகியாக நடித்த ராஷி கண்ணா தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.
அண்மையில் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்த ராஷி கண்ணா, "தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால் அனுஷ்கா அல்லது சமந்தாபோல தைரியமான நடிகையாக இருக்கவேண்டும். இவர்கள் இருவரையும் முன்னுதாரணமாக இப்போதிருக்கும் நடிகைகள் எடுத்துக்கொள்ளலாம்.
"மேலும் அனுஷ்கா, சமந்தா இருவரும் தென்னிந்திய நடிகைகள் குறித்து மக்கள் மத்தியில் இருந்த பார்வையை மாற்றியவர்கள்," என்று கூறினார்.