பிரியா: பொருளியல் சுதந்திரம் வேண்டும்’

பொரு­ளா­தா­ரச் சுதந்­தி­ரம்­தான் பெண்­க­ளின் தன்­னம்­பிக்கை அதி­க­ரிக்­கும் என்­கி­றார் பிரியா பவானி சங்­கர்.

இரு­பத்து நான்கு வய­தில் தாம் எடுத்த முக்­கி­ய­மான ஒரு முடி­வு­தான் இன்று ரசி­கர்­கள் முன்பு தம்மை வெற்­றி­க­ர­மான நடி­கை­யாக நிற்க வைத்­துள்­ளது என அண்­மைய பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

எப்­போ­துமே இயல்­பான பெண்­ணாக இருக்க வேண்­டும் என்­ப­து­தான் தனது விருப்­பம் என்று கூறி­யுள்ள அவர், நடிகை என்ற கார­ணத்­தால் சில விஷ­யங்­க­ளை­யும் நடை­மு­றை­களை­யும் தவிர்க்க முடி­ய­வில்லை என வெளிப்­ப­டை­யா­கப் பேசு­கி­றார். அவர் சொல்­வ­தைக் கேளுங்­கள்.

"நாம் அனை­வ­ரும் "சம்­பா­திப்­பதே நன்கு சாப்­பிட்டு, குடும்­பத்­தோடு மகிழ்ச்­சி­யாக பொழு­தைக் கழிக்க வேண்­டும் என்­ப­தற்­குத்­தான். அத­னால் நான் உண­வுக் கட்­டுப்­பாடு எதை­யும் பின்­பற்­று­வ­தில்லை. வயிறு நிறைய சாப்­பி­டு­வேன். மறு­நாள் கூடு­த­லான நேரம் உடற்­பயிற்சி செய்­வேன்.

"நடிகை என்­ப­தால் உட­லைக் கட்­டுக்­கோப்­பாக வைத்­தி­ருக்க வேண்­டும், வெளியே போகும்­போது நன்­றாக உடுத்த வேண்­டும் என்­றெல்­லாம் சொல்­கி­றார்­கள். அத­னால் அப்­படி இருக்க வேண்­டி­யுள்­ளது. இல்­லை­யெனில் நான் இயல்­பான பெண்­ணா­கவே இருக்க விரும்புகி­றேன்," என்­கி­றார் பிரியா.

இவ­ரது நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'ஓ... மணப்­பெண்ணே' படத்­துக்கு விமர்­சன ரீதி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இந்­தப் படத்­தின் கதைக்­களம் தமக்கு மிக­வும் பிடித்­தி­ருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"முந்­தைய படங்­களில் எனக்­கான காட்சி­கள் அல்­லது முக்­கி­யத்­து­வம் அதி­கம் இருக்­காது. சில முன்­னணி நாய­கர்­களின் படங்­களில் நானும் நடித்­தி­ருக்­கி­றேன் என்­று­தான் தோன்­றும். இதில் எனக்கு மன­நி­றைவு இல்லை.

"ஆனால் 'ஓ... மணப்­பெண்ணே' அப்­ப­டிப்­பட்ட படம் அல்ல. அதை என்­னு­டைய படம் என்று பெரு­மை­யா­கச் சொல்­லிக்­கொள்ள முடி­யும். நண்­பர்­கள், உற­வி­னர்­கள், சமூக வலைத்­த­ளங்­கள் மூல­மாக ரசி­கர்­கள் என அனைத்­துத் தரப்­பி­லும் இருந்து என் நடிப்­புக்கு பாராட்டு கிடைத்து வரு­கிறது. இதை­விட மகிழ்ச்சி தரும் விஷ­யம் இந்­தத் தரு­ணத்­தில் என் வாழ்க்­கை­யில் இல்லை," என்று சொல்­லும் பிரி­யா­வின் நடிப்­பில், அடுத்து 'பொம்மை', 'ஹாஸ்­டல்' ஆகிய படங்­கள் வெளி­யீடு காண உள்­ளன. சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என முன்­னணி நடி­கர்­க­ளு­டன் இணைந்து நடிக்­க­வும் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

பெண்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் தங்­க­ளுக்­கென ஒரு பாது­காப்பை ஏற்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும் என்­றும் அப்­போ­து­தான் இன்­றைய உல­கில் சிக்­க­லின்றி வாழ முடி­யும் என்­றும் கூறு­கி­றார்.

"எனக்­குப் 14 வய­தா­ன­போது, வங்­கியில் என் அப்பா எனது பெய­ரில் கணக்கு தொடங்­கி­னார். இப்­போது வரை அந்­தக் கணக்­கை­தான் பயன்­ப­டுத்­து­கி­றேன்.

"கல்­லூ­ரி­யில் கால்பதித்த முத­லாம் ஆண்­டில் இருந்தே பகுதி நேர­மாக ஏதா­வது வேலை பார்த்து சம்­பா­திக்­கத்தொடங்­கி­னேன். கொஞ்­ச­மா­கத்­தான் பணம் கிடைத்­தது என்­றா­லும், அதி­லும் ஒரு­வித மன­நி­றைவு இருந்­தது. இப்போ­தும்­கூட என் செலவுக்­குப் பணம் தேவைப்­பட்­டால் அப்­பா­வி­டம் விவ­ரம் சொல்­லி­விட்­டுத்­தான் பணம் எடுப்­பேன். கார­ணம் அவர் மீதுள்ள மரி­யாதை," என்­கி­றார் பிரியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!