'டெடி', 'சார்பட்டா பரம்பரை',
'அரண்மனை 3' படங்களின் வெற்றி
களைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா கேப்டனாக களமிறங்க இருக்கிறார். 'டெடி' படத்தின் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனுடன் மீண்டும் இணைந்து இந்தப் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் கூறும்போது, "தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் அனைத்திலும் தன் உயிரைக்கொடுத்து உழைக்கும் நடிகர் ஆர்யா. அவரைப் பற்றி நான் சொல்ல
வேண்டியது இல்லை. அவர் நடிப்புத் திறமை குறித்து ஊரே அறியும்.
'கேப்டன்' படத்தைப் பொறுத்தவரை கதாபாத்திரத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து முழு அர்ப்பணிப்பையும் தந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். ஆர்யா அதனை ஒவ்வொரு படத்திலுமே தவறாமல் செய்து வருகிறார். இந்தத் திரைப்
படம் வெளிவரும்போது இப்போது உள்ள ரசிகர் வட்டத்தைத் தாண்டி, பல மொழிகளிலும் அவருக்கு ரசிகர்கள் இருப்பார்கள்," என்று பெருமையாகப் பேசினார். படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.