இயக்குநரிடம் சமந்தாவின் வேண்டுகோள்

தெலுங்­கில் சுகு­மார் இயக்­கத்­தில் அல்லு அர்­ஜுன், ராஷ்­மிகா

நடிக்­கும் 'புஷ்பா' படத்­தில் ஒரு பாட­லுக்கு நட­ன­மாட சமந்தா சம்­ம­தித்துவிட்­டார் என்­ப­தும் அதற்­காக அவ­ருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் சம்­ப­ள­மாகப் பேசப்­பட்­டுள்­ளது என்­ப­தும் தெரிந்த

செய்­தி­.

இந்­தப் பாடலை ஹைத­ரா­பாத் நக­ரி­லேயே பிர­ம்மாண்ட அரங்­கம் அமைத்து பட­மாக்­கு­வ­தற்கு

முடிவு செய்தி ருந்தது படக்­குழு.

ஆனால்

சமந்­தாவோ நகரை விட்டு சற்றே தொலை­வில் இருக்­கும் 'ராமோ­ஜி­ராவ் பிலிம் சிட்­டி­'யில் இந்­தப் பாட­லின் படப்­பி­டிப்பை நடத்த­ இயக்­கு­நர் சுகு­மா­ரி­டம் வேண்­டு­கோள் வைத்­துள்­ளா­ராம்.

அண்­மை­யில் தனது விவா­க­ரத்தை அறி­வித்த சமந்தா,

நக­ரின் அரு­கில் படப்­பி­டிப்­பில்

கலந்­து­கொண்­டால் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­திக்க வேண்டி வரும் என்­ப­தால் அதைத் தவிர்ப்­ப­தற்­காக இந்த இட­மாற்ற கோரிக்­கையை வைத்­துள்­ளா­ராம்.

இயக்­கு­ந­ரும் அவ­ரு­டைய நிலை­மையைப் புரிந்­து­கொண்டு சம்­ம­தம் தெரி­வித்து இருக்­கி­றார்.

தமிழில் இவர்

நடிப்­பில் 'காத்து வாக்­குல ரெண்டு காதல்' படம் டிசம்­ப­ரில் வெளி­யாக இருக்­கிறது. இந்­நி­லை­யில் சமந்தா கறுப்பு நிற உடை­யில் படப்­பி­டிப்பு செய்து

அந்­தப் புகைப்­

ப­டங்­களை தனது சமூக வலைத்­

த­ளங்­களில் பகிர்ந்து

வரு­கி­றார். அவரது ரசிகர்கள் ஆவலுடன் அவற்றைப் பகிர்ந்து வருகின்றனர்.

மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படத்தைத் தெலுங்கில் 'காட்பாதர்' என்ற பெயரில் மறுபதிப்பு செய்கின்றனர். அதில் சிரஞ்சீவிதான் நாயகன். இந்தப் படத்தில் நாயகிக்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும் நாயகியாக நயன்தாராதான் நடிக்கவேண்டும் என்று சிரஞ்சீவி கேட்டுக் கொண்டதையடுத்து நயன்தாராவிற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

நாக சைதன்யா 'பங்கர் ராஜு', 'தேங்க் யூ', 'லால் சிங்க் சத்தா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இணையத் தொடர் ஒன்றிலும் நாக சைதன்யா நடிக்க இருக்கிறார். அதில் ப்ரியா பவானி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் சமந்தாவுடனான பிரிவுக்குப் பிறகு நாக சைதன்யா முதன் முறையாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் 'கிரீன் லைட்' என்ற புத்தகத்தைப் பகிர்ந்துள்ள அவர், "வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம். உங்கள் வாழ்க்கை பயணத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மேத்யூ," என்று தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாளில் அவருக்கு பிறந்த நாள் வரவிருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் 'ஓடிடி'யில் வெளியாகும் நேரம் புதுமுகங்கங்கள் நடித்திருக்கும் சிறிய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது முக்கியமான நிகழ்வு. டிசம்பர் 3ஆம் தேதி 4 தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.

ஜீ.வி.பிரகாஷ், திவ்யா பாரதி நடிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கியிருக்கும் 'பேச்சிலர்', பலமுறை வெளியீட்டு தேதி அறிவித்து தள்ளிப்போன 'தள்ளிப்போகாதே', சான்டி, ஸ்ருதி செல்வம், ரேஷ்மா நடித்திருக்கும் '3:33', ப்ளூ சட்டை மாறன் இயக்கி நடித்திருக்கும் 'ஆன்டி இண்டியன்' படங்கள் அடுத்த மாதம் 3ஆம் தேதி வெளியாக இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!