அஷ்வின்: ரசிகர்கள் அன்பு முக்கியம்

ரசி­கர்­க­ளின் அன்பு இருந்­தால் எதை­யும் சாதிக்­க­லாம் என்­கி­றார் இளம் நாய­கன் அஷ்­வின்.

தனி­யார் தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப் பாகும் சமை­யல் கலை தொடர்­பான நிகழ்ச்­சி­யின் மூலம் ரசி­கர்­க­ளைக் கவர்ந்த வர்.

இந்­நி­லை­யில், 'என்ன சொல்ல போகி­றாய்' படத்­தில் நாய­க­னாக நடித்­துள்­ளார் அஷ்­வின். அவந்­திகா, தேஜு அஸ்­வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்­ளிட்­டோர் நடித்­துள்ள இந்­தப் படத்தை ஹரி­ஹ­ரன் இயக்கி உள்­ளார்.

இதன் இசை வெளி­யீட்டு விழா சென்­னை­யில் நடைபெற்­றது. இதில் படக்­கு­ழு­வில் உள்ள அனை­வ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

அப்­போது ரசி­கர்­க­ளின் அன்­பால்­தான் தாம் ஓர­ளவு வளர்ந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார் அஷ்­வின்.

"நீங்­கள் தரும் அன்­பு­தான் என்னை வளர்த்­துள்­ளது. நானும் கனவு கண்­டி­ருக்­கி­றேன். ஆனால், இந்த இடத்­திற்கு வரு­வேன் என்று நினைக்­க­வில்லை.

"இந்­தப் படத்­திற்கு முன், பின் என என் வாழ்க்­கை­யைப் பிரிக்­க­லாம். நான் பங்­கேற்ற தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­கள் வாழ்க்­கை­யில் மிகப்­பெ­ரிய திருப்­பங்­களை உரு­வாக்­கித் தந்­துள்­ளன.

"ஒரு நகைச்­சுவை நிகழ்ச்சி இந்த அளவு ரசி­கர்­க­ளைக் கவ­ரும் என்று நினைத்­துக்­கூ­ட பார்க்­க­வில்லை. உங்­கள் அன்பை ஈடு­கட்­டும் வகை­யில் ஒரு படத்­தைக் கொடுக்க வேண்­டும் என்று காத்­தி­ருந்­தேன். இப்­போது இந்­தப் படத்­தின் மூலம் ரசி­கர்­களி­டமே மீண்­டும் வந்­தி­ருக்­கி­றேன்.

"என்­னி­டம் ஒரு கெட்ட பழக்­கம் உண்டு. கதை கேட்­கும்­போது பிடிக்­க­வில்லை என்­றால் உடனே தூங்­கி­வி­டு­வேன். நாற்­பது கதை­க­ளைக் கேட்­டுத் தூங்­கி­யி­ருக்­கி­றேன்.

"நான் தூங்­கா­மல் கேட்ட ஒரே கதை 'என்ன சொல்ல போகி­றாய்' மட்­டும்­தான். இயக்­கு­நர் ஹரி­ஹ­ரன் அவ்­வ­ளவு சிறப்­பா­கச் செய்­தி­ருக்­கி­றார்.

"இந்­தப் படத்தை நீங்­கள் பார்த்­துக் கொண்­டா­டு­வ­தைக் காண ஆவ­லாக இருக்­கி­றேன். இந்­தப் படம் பல பேரின் கனவு. நிச்­ச­யம் வெற்­றி­பெ­றும் என நம்­பு­கி­றேன்," என்­றார் இளம் நாய­கன் அஷ்­வின்.

இதற்­கி­டையே அவ­ரது இந்­தப் பேச்சு சர்ச்­சை­யாகி உள்­ளது.

"உதவி இயக்­கு­நர்­க­ளாக இருப்­ப­வர்­கள், நிறைய கன­வு­க­ளு­டன் கதை சொல்ல வரு­கி­றார்­கள். அவர்­கள் சொல்­லும் கதை­யைக் கேட்டு தூங்­கி­விட்­ட­தா­கச் சொல்­ல­லாமா?" என்று சமூக வலைத்­த­ளங்­களில் பலர் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

மேலும், வாழ்க்­கை­யில் சிவ­கார்த்­தி­கே­யனை தான் முன்­மா­தி­ரி­யா­கக் கரு­து­வ­தா­கக் கூறி­யுள்ள அஷ்­வின், இந்த நிகழ்ச்­சி­யில் தனக்­குப் பாது­காப்பு அளிப்­ப­தற்­காக சிலரை அழைத்து வந்­த­தும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!