சிம்புவுடன் இணையும் இரு புது நாயகிகள்

'மாநாடு' படத்­தின் வெற்­றி­யைத் தொடர்ந்து சில சர்ச்­சை­கள் வெடித்த போதி­லும், அடுத்­த­டுத்து நடிக்­கும் படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் சிம்பு.

குறிப்­பாக கௌதம் மேனன் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் 'வெந்து தணிந்­தது காடு' படத்­தில் கூடு­தல் உற்­சா­கத்­து­டன் நடித்து வரு­கி­றார்.

ஏற்­கெ­னவே கௌதம் இயக்­கத்­தில் சிம்பு நடித்த 'விண்­ணைத்­தாண்டி வரு­வாயா' பெரும் வெற்றி­யைப் பெற்­றது. இத­னால் இந்­தப் புதிய படம் குறித்த எதிர்­பார்ப்பு சிம்­பு­வி­ட­மும் நாளுக்கு நாள் அதி­கரித்து வரு­கி­ற­தாம்.

இந்­நி­லை­யில், சிம்­பு­வுக்கு ஜோடி­யாக கயாடு லோகர் என்ற புது­முகத்தை கதா­நா­ய­கி­யாக ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர். படத்­தில் இன்­னொரு நாய­கி­யும் உள்­ளா­ராம்.

அந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் சிட்தி இட்­னானி ஒப்­பந்­த­மாகி உள்­ளார். கதைப்­படி, இவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் பாவை. இவ­ரும் சிம்பு­வும் இணைந்து நடிக்­கும் காட்­சி­கள் நாளை முதல் சென்­னை­யில் பட­மாக்­கப்­பட உள்­ளன.

இந்­நி­லை­யில், இப்­ப­டக்குழுவினர் சிட்தி இட்­னா­னியை வர­வேற்­கும் வித­மாக சுவ­ரொட்டி ஒன்றை வெளி­யிட்­டுள்­ள­னர்.

சிம்பு ரசி­கர்­க­ள் இந்த சுவரொட்டி அழ­காக இருப்­ப­தாக சமூக வலைத் த­ளங்­களில் குறிப்­பிட்­டுள்­ள­னர். இதனால் உற்சாகத்தில் உள்ளார் சிட்தி இட்னானி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!