ஹன்சிகா கைவசம் ஒன்பது படங்கள்

வாய்ப்­பு­களே இல்லை என்­பதுபோல் பேசப்­பட்ட நிலை­யில், ஒன்பது படங்­களில் நடித்து வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளார் ஹன்­சிகா மோத்­வானி. இந்­தப் படங்­கள் அனைத்­தும் அடுத்­த­டுத்து வெளி­யீடு காணும் எனக் கூறு­கி­றார்.

ஹன்­சிகா மோத்­வானி தமிழ் படத்­தில் நடித்து இரண்டு ஆண்டு க­ளா­கி­விட்­டன. கடந்த 2019ஆம் ஆண்­டுக்­குப் பிறகு கோடம்­பாக்கம் பக்­கம் அவர் எட்­டிப்­பார்க்­க­வில்லை.

இடை­யில் அவர் நடித்த 'மகா' படம் எப்­போதோ வெளி­யீடு காண தயா­ரா­கி­யும், இன்­னும் வெளி­வ­ர­வில்லை. இந்­நி­லை­யில், இந்­தப் புத்­தாண்டு தமக்கு பல வெற்­றி­களைப் பெற்­றுத்­த­ரும் என்று நம்பு­கி­றா­ராம்.

கடந்த ஆண்டு அனை­வ­ருக்­கும் ஒரு பெரிய சவா­லாக இருந்­த­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், திரை­யு­ல­கம் எதிர்­கொண்ட சோத­னை­கள் அள விட முடி­யா­தவை என்­கி­றார்.

"அனை­வ­ரும் இயல்புநிலைக் குத் திரும்­பு­வ­தாக வெளி­வ­ரும் செய்தி­கள் இருள் விலகி வெளிச்­சம் தெரி­வது போன்ற மகிழ்ச்­சியை அளிக்­கிறது. கடி­ன­மான நேரத்­தில் ஆத­ர­வாக இருந்த அனை­வ­ரின் அன்­பிற்­கும் நன்றி.

"உங்­க­ளு­டைய அன்­பு­தான் இந்த உல­கத்தை முன்­னோக்­கிப் பய­ணப்­பட வைக்­கிறது, வெவ்­வேறு கட்­டங்­களில் உள்ள, வளர்ந்து வரும் ஒன்­பது திரைப்­ப­டங்­களில் நடித்து வரு­கி­றேன். இந்த ஆண்டு உங்களது­அனைத்து கன­வு­களும் நன­வாகவும். அனை­வ­ரும் தங்கள் இலக்­கு­களை அடைய வேண்­டும் எனவும் விரும்­பு­கி­றேன்," என்கிறார் ஹன்சிகா மோத்வானி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!