திரைத் துளி­கள்

 தமக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உள்ளதாக நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார் அருண் விஜய். நடிகை மீனாவும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும் கிருமி தொற்றி உள்ளதாகத் தகவல்.

 புத்தாண்டு பிறந்ததும் முதல் வேலையாக திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் இளம் நாயகி ஆத்மிகா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை 'விளக்கு, பிரகாசம், தெய்வீகம்' என்ற தலைப்பில் அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளி யிட, ஏராளமானோர் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரி வித்துள்ளனர். 'கண்ணை நம்பாதே', 'நரகாசூரன்' ஆகிய இரு படங்களும் இவரது நடிப்பில் வெளியீடு காண உள்ளன.

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்த 'மகான்' படம் வெளியீடு காண தயாராக உள்ளது.

இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒருவழியாக 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. எனவே பட வெளியீட்டை விரைவில் எதிர்பார்க்கலாம் என அதன் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.

 விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் வில்லனாக நடித்துள்ள இயக்குநர் செல்வராகவனுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. இந்நிலையில் 'ஒருநாள் கூத்து', 'மான்ஸ்டர்' திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் செல்வாவை எதிர்மறை கதாபாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. 'ஜித்தன்' ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நடிப்புக்கு மத்தியில், தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தை இயக்கவும் உள்ளார் செல்வராகவன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!