உண்மைக்கதையுடன் களமிறங்கும் சசி படம்

சசி­கு­மார் நடித்­துள்ள 'கொம்­பு­வச்ச சிங்­கம்டா' பொங்­கல் பண்­டி­கையை­யொட்டி வெளி­யீடு காண்­கிறது. இதில் அவ­ரது ஜோடி­யாக மடோனா செபாஸ்­டி­யன் நடித்­துள்­ளார்.

அஜித் நடித்­துள்ள 'வலிமை' திரைப்­ப­டம் பொங்­க­லுக்கு வெளி­யா­காது என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, குறைந்த பொருட்செல­வில் படங்­க­ளைத் தயா­ரித்­துள்­ள­வர்­கள் இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்­திக் கொள்ள முயற்சி செய்து வரு­கின்­ற­னர்.

அனை­வ­ரை­யும் முந்­திக்­கொண்டு நடி­கர் விஷால் தான் எடுத்­துள்ள 'வீரமே வாகை சூடும்' படம் பொங்­க­லுக்கு வெளி­யா­கும் என அறி­வித்­தார். 'வலிமை' குறித்து தக­வல் வெளி­யா­கும் முன்பே, விஷால் தரப்பு இந்த அறி­விப்பை வெளி­யிட்­டது.

இந்­நி­லை­யில், 'கொம்­பு­வச்ச சிங்­கம்டா' பட­மும் பொங்­க­லுக்கு வெளி­யா­வது தெரிய வந்­துள்­ளது. உண்­மைச் சம்­ப­வத்தை அடிப்­படை­யா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. பிர­பா­கர் இயக்கி உள்­ளார்.

"கடந்த 1990 - 94ஆம் ஆண்­டு­களில் தமி­ழ­கத்­தின் சிறு நக­ரம் ஒன்­றில் நடந்த பர­ப­ரப்­பான, உண்­மைச் சம்­ப­வத்­தைத்­தான் பட­மாக்கி உள்­ளோம். இதில் கதா­நா­ய­க­னாக நடிக்க சசி சார்­தான் பொருத்­த­மாக இருப்­பார் என்று நான் மட்டு­மல்ல, ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் கரு­தி­யது. அதற்­கேற்ப அரு­மை­யாக நடித்­துள்­ளார்.

"மேலும், கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன், ஸ்ரீ பிரியங்கா, தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்," என்கிறார் பிரபாகர்.

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!