‘ஓடிடி’யில் ‘வலிமை’: ரூ.300 கோடிக்கு பேரம்

அஜித்­தின் 'வலிமை' படத்தை ஓடிடியில் நேர­டி­யாக வெளி­யிட முன்­னணி நிறு­வ­னம் 300 கோடி ரூபாய் தர முன்­வந்­த­தாக வெளி­யான தக­வல் கோடம்­பாக்க வட்­டா­ரங்­களில் ஆச்­ச­ரிய அலையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஏனெ­னில் இது­வரை எந்­த­வொரு தமிழ்ப் படத்­துக்­கும் இவ்­வ­ளவு பெரிய தொகையை அளிக்க எந்த நிறு­வ­ன­மும் முன்­வந்­தது இல்லை.

தமி­ழ­கத்­தில் உள்ள திரை­ய­ரங்­கு­களில் 50% இருக்­கை­களை மட்­டுமே நிரப்ப முடி­யும் என மாநில அரசு கட்­டுப்­பாடு விதித்­துள்­ளது. இத­னால் 'வலிமை' படத்தை பொங்­கல் பண்டிகையை­யொட்டி வெளி­யி­டப்போவ­தில்லை எனத் தயா­ரிப்­பா­ளர் போனி கபூர் அறி­வித்­துள்­ளார். இத­னால் அஜித் ரசி­கர்­கள் வருத்­தத்­தில் உள்ளனர்.

இந்­நி­லை­யில், 'வலிமை' படத்தை வெளி­யி­டும் விருப்­பத்தை முன்­னணி நிறு­வ­னம் ஒன்று போனி கபூ­ரி­டம் தெரி­வித்­துள்­ளது. எடுத்த எடுப்­பிலேயே ரூ.300 கோடி தரு­வ­தாக அந்­நி­று­வனம் சொன்­ன­தைக் கேட்டு தயா­ரிப்­புத் தரப்பு மிரண்டுபோன­தாம். இது­கு­றித்து அஜித்­தி­ட­மும் விவா­திக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும், 'வலி­மை'யை திரை­ய­ரங்­கு­களில் வெளி­யிட்­டால்­தான் அது ரசி­கர்­களைச் சரி­யான வகை­யில் சென்றடை­யும் என்­றும் மிக அதி­கப்­ப­டி­யான வசூல் வர­வில்லை என்­றா­லும் பர­வா­யில்லை என்றும் அஜித் தரப்­பில் கூறப்­பட்­ட­தா­கத் தகவல்.

இதற்­கி­டையே, தமி­ழக அர­சின் உத்­த­ரவு கார­ண­மாக திரை­ய­ரங்­கு­களில் புதுப்­ப­டத்தை வெளி­யிடத் தயங்­கும் தயா­ரிப்­பா­ளர்­களை சில முன்­னணி ஓடிடி நிறு­வ­னங்­கள் தொடர்புகொண்­டுள்­ள­ன­வாம். கணி­ச­மான தொகைக்கு அப்­ப­டங்­களை வாங்­கிக்கொள்­வ­தாக அந்­நி­று­வ­னங்­கள் கூறு­கின்­றன.

எனி­னும், ஓடி­டி­யில் நேர­டி­யாக வெளி­யிட்­டால், திரை­யு­லக அமைப்பு­களைப் பகைத்­துக்கொள்ள நேரி­டுமோ என்று தயா­ரிப்­பா­ளர்­கள் தயக்­கத்­தில் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!