திரைத் துளி­கள்

 ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிற மொழிகளிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. தற்போது 'புலிமட' என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்திலும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் தேடி வருகின்றனவாம். அதனால் சம்பள விஷயத்தில் கறார் காட்டாமல், தேடி வரும் வாய்ப்புகளை உற்சாகத்துடன் ஏற்றுக்கொள்கிறார்.

 மீண்டும் காதல் வலையில் விழுந்துள்ளார் நடிகை ஷ்ருதி ஹாசன். சாந்தனு ஹஸாரிகா என்ற ஓவியரைக் காதலிப்ப தாக அவர் அண்மையில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இணையம் வழி ரசிகர்களுடன் உரையாடிய போது, அவர் தனது புதிய காத லர், காதல் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். காதலை தாமே முதலில் வெளிப்படுத்தியதாக அப்போது குறிப்பிட்டார் ஷ்ருதி.

"இருவரில் யார் காதலில் மிகுந்த ஆர்வம் காட்டியதாக பலரும் கேட்கின்றனர். சாந்தனுதான் ஆர்வம் காட்டினார். எனினும், இருவரில் நான்தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார்," என்று ஷ்ருதி தெரிவித்துள்ளார்.

 நடிகை ரெபா மோனிக்கா தனது நீண்ட நாள் நண்பர் ஜோமான் ஜோசஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 'பிகில்' படத்தில் நடித்த ரெபா, பின்னர் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடித்திருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று இவரது திருமணம் குடும்பத் தார், நண்பர்கள் சூழ நடைபெற்றது.

 சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது.

இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக சூர்யா பெயரில் வெளியான அறிக்கை போலியானது எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடுக்க சூர்யா முடிவு செய்துள்ளாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!