காதல், திருமணம்: பேச விரும்பாத ஷ்ருதி

காதல், திரு­ம­ணம் குறித்­துப் பேசு­வ­தில் தமக்கு அறவே விருப்­பம் இல்லை என்­கி­றார் ஷ்ருதி ஹாசன்.

பல ஆண்­டு­கள் திரை­யு­ல­கில் நீடித்து வந்­தா­லும், அத்­துறை குறித்து தமக்கு ஒன்­றும் தெரி­யாது என்­பதே உண்மை என்று அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மீண்­டும் சந்­தனு என்­ப­வ­ரு­டன் காதல்­வ­யப்­பட்­டுள்­ளார் ஷ்ருதி. இரு­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் காதலை வெளிப்­ப­டுத்­திய போதும், அதை அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்­லும் எண்­ணம் இப்­போ­தைக்கு இல்லை என்­கி­றார்.

"ஒரு­வ­ரைக் காத­லிப்­ப­தன் கார­ண­மாக அது குறித்து அதி­கம் பேச வேண்­டிய அவ­சி­யம் இல்லை. பொது­வா­கவே காதல், திரு­ம­ணம், குடும்­பம் ஆகி­யவை குறித்து விரி­வா­கப் பேசு­வதை நான் விரும்­பி­ய­தில்லை.

"திரை­யு­ல­கில் அறி­மு­க­மான புதி­தில் அதிக விவ­ரங்­கள் தெரி­யா­மல் தடு­மா­றி­னேன். கார­ணம், அப்­போது எனது கவ­னம் முழு­வ­தும் இசைத்­து­றை­யில் மட்­டுமே குவிந்­தி­ருந்­தது. எதிர்­பா­ராத வித­மாக நடி­கை­யாக மாற வேண்­டி­ இ­ருந்­தது. நான் இந்­தத் துறை­யில் இவ்­வ­ளவு ஆண்­டு­கள் நீடித்­தி­ருக்­கி­றேன் என்­பதே ஆச்­ச­ரி­ய­மான விஷ­யம்­தான்," என்­கி­றார் ஷ்ருதி.

தாம் புது முயற்­சி­களை மேற்­கொண்ட போதெல்­லாம் பலர் பல்­வேறு வித­மான சந்­தே­கங்­களை எழுப்­பி­ய­தா­க­வும் தம்மை பய­மு­றுத்த முயற்சி செய்­த­தா­க­வும் அவர் கூறி­உள்­ளார்.

"நான் என்ன செய்ய வேண்­டும் என விரும்­பி­னேனோ அதையே செய்­தேன். அத­னால் ஏற்­பட்ட விளை­வு­க­ளை­யும் நானே எதிர்­கொண்­டேன்," என்­கி­றார் ஷ்ருதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!