‘பிறருடன் ஒப்பிட வேண்டாம்’

'புஷ்பா' படத்­தின் வெற்றி ராஷ்­மிகா மந்­த­னாவை உற்­சா­கத்­தின் உச்­சிக்கு கொண்டு போயி­ருக்­கிறது. இந்த வெற்­றி­யைத் தக்க வைக்க வேண்­டு­மா­னால், தாம் நடிக்­கும் அடுத்­த­டுத்த படங்­களும் வசூ­லில் சாதிக்க வேண்­டும் என்­பதை உணர்ந்­துள்­ளார்.

இந்­தித் திரை­யு­ல­கி­லும் கால் பதித்­துள்ள நிலை­யில், அங்கு அமி­தாப்­பச்­ச­னு­டன் இணைந்து நடிப்­ப­தால் ராஷ்­மி­கா­வின் மகிழ்ச்சி இரட்­டிப்­பாகி உள்­ளது.

'புஷ்பா' படத்­தில் ஸ்ரீ வள்ளி என்ற பாத்­தி­ரத்­தில் நடித்து அசத்தி இருப்­ப­வர், இப்­போது இந்­தியா முழு­வ­தும் அறி­யப்­பட்ட நடி­கை­யா­கி­விட்­டார். இந்த வெற்­றிக்கு தனது நடிப்பு மட்­டு­மல்­லா­மல் இயக்­கு­ந­ரின் கடும் உழைப்­பும் முக்­கிய கார­ணம் என்­கி­றார்.

"அனைவரையும் என்னை திரும்­பிப்­பார்க்க வைத்த­பாத்­தி­ரம் அமைந்­தது என் அதிர்ஷ்­டம். இயக்­கு­நர் கதையை விவ­ரித்­த­போதே இந்த கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­க­ளுக்­குப் பிடித்­த­மா­ன­தாக இருக்­கும் என்று தோன்றியது.

"எனக்­குள் ஒளிந்­து­கொண்­டி­ருந்த ஸ்ரீ வள்­ளியை வெளிக்­கொண்டு வந்­தது அவர்­தான். அத­னால்­தான் ஸ்ரீ வள்ளி கதா­பாத்­தி­ர­மாக என்­னால் மாற முடிந்­தது. நானா இப்­படி நடித்­தி­ருக்­கி­றேன் என்று எனக்கே அவ்­வப்­போது ஆச்­ச­ரி­யம் ஏற்­ப­டு­கிறது. எனவே எனக்கு கிடைக்­கும் பாராட்­டு­களும் வர­வேற்­பும் சுகு­மா­ருக்­குத்­தான் போய்ச்­சேர வேண்­டும்," என்று பணிவு காட்­டு­கி­றார் ராஷ்­மிகா.

அண்­மைய பேட்டி ஒன்­றில், திரை­யு­ல­கில் ஆணா­திக்­கம் என்­பது குறைந்து வரு­வ­தா­க­வும் நடி­கை­க­ளுக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­வதை தாம் வர­வேற்­ப­தா­க­வும் கூறி­உள்­ளார்.

"அனைத்து துறை­க­ளி­லும் ஆணா­திக்­கம் உள்­ளது. ஆனால் முன்பு போல் அதி­க­மாக இல்லை. திரை­யு­ல­கில் இப்­போது எவ்­வ­ளவோ மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. ரசி­கர்­கள் திற­மையை மட்­டுமே முன்­னி­றுத்­து­கி­றார்­கள்.

"திறமை இருப்­பின் உங்­க­ளு­டைய தோற்­றம், வயது என்று எதை­யும் அவர்­கள் கண்­டு­கொள்­வ­தில்லை. திற­மையை மதிக்­கும் போக்­கு­தான் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"என்­னைப் பொறுத்­த­வரை நாம் நாமாக இருக்க வேண்­டும். மற்­ற­வர்­க­ளு­டன் நம்மை ஒப்­பிட்­டுப் பார்க்­கவே கூடாது. எப்­போது ஒப்­பி­டு­வதை நிறுத்­து­கி­றோமோ, அப்­போது நமக்கு மாற்­றாக யாரும் இல்லை என்ற நிலையை அடைந்­தி­ருப்­போம்.

"அத­னால்­தான் நான் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­க­ளு­டன் என்­னால் பொருந்த முடி­கிறது. இதை ரசி­கர்­களும் ஏற்­றுக்­கொண்டு எனக்கு சிறப்­பா­ன­தொரு இடத்­தைக் கொடுத்­தி­ருப்­ப­தாக நம்­பு­கி­றேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

தமி­ழில் இவர் எதிர்­பார்த்த அளவு வாய்ப்­பு­கள் அமை­ய­வில்லை. ஆனா­லும் பெரிய நடி­கர்­க­ளின் புதுப்­பட அறி­விப்­பு­கள் வெளி­யா­கும் முன்­னர், அப்­ப­டங்­க­ளின் நாய­கி­யாக ராஷ்­மி­கா­வின் பெயர் பரி­சீ­ல­னை­யில் இருப்­ப­தாக தொடர்ந்து தக­வல் வெளி­யா­கிறது.

"இதன் மூலம் தமிழ் ரசி­கர்­கள் என் மீது வைத்­துள்ள அன்­பை­யும் அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பு­க­ளை­யும் என்­னால் புரிந்­து­கொள்ள முடி­கிறது. நான் தமி­ழில் அதி­கம் நடிக்க வேண்­டும் என அவர்­கள் விரும்­பு­வ­தால்­தான் இப்­ப­டிப்­பட்ட தக­வல்­கள் வெளி­யா­கின்­றன," என்­கி­றார் ராஷ்­மிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!