புதுப்படத்தை வெளியிட திடீர் எதிர்ப்பு

தமி­ழ­கத்­தில் நிலவி வரும் சாதிப் பிரச்­சி­னை­களை மையப்­ப­டுத்தி உரு­வாகி உள்­ளது 'சாயம்' திரைப்படம். இன்று வெளி­யீடு காண உள்ள நிலை­யில், தென் மாவட்­டங்­களில் இப்­ப­டத்தை வெளி­யிட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இத்­த­க­வலை செய்­தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்த படத்­தின் நாய­கன் விஜய் விஷ்வா, படிக்­கும் வய­தில் மாண­வர்­கள் சாதி­யைப் பற்றி நினைக்­கா­மல் கல்­வி­யில் மட்­டுமே கவ­னம் செலுத்த வேண்­டும் என்­கிற நல்ல கருத்தைத்தான் இப்­ப­டத்­தில் இயக்கு­நர் அழுத்­த­மாகக் கூறி­உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"இந்­தப் பிரச்­சினை குறித்து வெளிப்­ப­டை­யா­கப் பேச வேண்­டாம் என்­று­தான் முடிவு செய்­தி­ருந்­தேன். எனி­னும் இது இயக்­கு­ந­ரின் வலி என்­ப­தால் தெரி­விக்க வேண்­டி­ய­தாகிவிட்­டது. இது சாதியை மையப்­ப­டுத்தி உரு­வான படம் என்­றா­லும், எந்த ஒரு சாதி­யை­யும் உயர்த்­தியோ தாழ்த்­தியோ எந்­தக் காட்­சி­யும் இடம்­பெ­ற­வில்லை.

"இந்­தப் படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மான சம­யத்­தில் இருந்து இப்­போது வரை இது வெற்றி பெறும் என்ற நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றேன்," என்­றார் விஜய் விஷ்வா.

இதை­ய­டுத்து பேசிய இயக்­கு­நர் ஆண்­டனி சாமி, "ஒரு படத்­துக்கு இப்­ப­டி­யெல்­லாம்­கூட எதிர்ப்பு வருமா என்று எண்ணும் வித­மாக எதிர்­பா­ராத திசை­களில் இருந்து எல்­லாம் இந்த படத்­திற்கு எதிர்ப்­பு­கள் கிளம்­பி­யதை எங்­க­ளால் நினைத்துக்கூடப் பார்க்க முடி­ய­வில்லை," என்­றார்.

குறிப்­பாக, இந்த படத்தை தென் மாவட்­டங்­களில் திரை­யிட வேண்­டாம் என எதிர்ப்­பு­கள் கிளம்பி­ உள்­ளன என்­றார் அவர்.

தென் மாவட்­டம்­தான் கதைக்­களம் என்­ப­தால் தென் மாவட்டத் தலை­வர் ஒரு­வ­ரது புகைப்­ப­டத்தை சில காட்­சி­க­ளின் பின்­ன­ணி­யில் பயன்­ப­டுத்தி உள்­ள­ன­ராம். அதனால்­தான் எதிர்ப்பு கிளம்­பி­உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!