‘கருவேல மரம் அரசியல் குறித்து பேசும் படம்’

'மத­யா­னைக்­கூட்­டம்' திரைப்­ப­டத்­தின் மூலம் கவ­னிக்­கப்­பட்ட இயக்­கு­நர் சுகு­மா­றன் அதற்­குப் பிறகு என்ன செய்­கி­றார் என்று எந்­தத் தக­வ­லும் இல்லை.

சுமார் ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு சாந்­த­னுவை வைத்து 'இரா­வண கோட்­டம்' படத்தை இயக்கி உள்­ளார். இதில் 'கயல்' ஆனந்­தி­தான் நாயகி.

"இது சாதிப்­ப­டமோ சாதி­யைத் தூக்­கிப் பிடிக்­கும் படமோ அல்ல. ராம­நா­த­புர மாவட்­டத்­தில் மண்­டிக் கிடக்­கும் கரு­வே­ல­ம­ரம் அர­சி­யல் குறித்­துப் பேசி­யி­ருக்­கோம்.

"கடந்த 1958ஆம் ஆண்டு அங்கு கரு­வே­லம் விதை­களை விதைத்­த­னர். அவற்றை ஏன் இன்­னும் அழிக்­கா­மல் வைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வில்லை.

"கரு­வே­லம் ஆபத்­தான மரம். எதை­யும் வள­ர­வி­டாது. எந்த விவ­சா­யத்­தை­யும் சரி­வ­ரச் செய்ய விடாது. அதை ஏன் அழிக்­கா­மல் அப்­ப­டியே விட்­டு­வைத்­தி­ருக்­கி­றோம் என்­ப­தி­லும் அர­சி­யல் இருக்­கிறது. கரு­வேல மரத்­தால் தண்­ணீர், காற்று எல்­லாமே மாச­டைந்து­விட்­டது.

"ராம­நா­த­பு­ரத்­தில், பல ஊர்­களில் நிறைய வீடு­கள் உள்­ளன. ஆனால் வசிக்­கத்­தான் மனி­தர்­கள் இல்லை. இது மண்­வா­ச­னை­யும் அர­சி­யல் குர­லும் இணைந்த பட­மாக இருக்­கும்," என்­கி­றார் சுகு­மா­றன்.

அறு­பது ஆண்­டு­க­ளாக விரி­வா­கச் சொல்­லப்­ப­டாத, பல­ருக்­குத் தெரி­யாத உண்­மை­களை இந்­தப் படம் சொல்­லும் என்று குறிப்­பி­டு­ப­வர், ராவ­ணன் தமிழ் அர­சன் என்­ப­தா­லும் ராம­நா­த­பு­ரப் பகுதி அவ­னது கட்­டுப்­பாட்­டில் இருந்­தது என்­ப­தா­லும் 'இரா­வண கோட்­டம்' என்று தலைப்பு வைத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!