ஐந்து தோற்றங்களில் சிம்பு

கௌதம் மேனன் இயக்­கும் 'வெந்து தணிந்­தது காடு' படத்­தில் சிம்பு ஐந்து தோற்­றங்­களில் நடித்து வரு­கி­றார்.

அடி­பட்டு பயந்து நிற்­கும் அப்­பாவி இளை­ய­ராக, சரா­சரி நடுத்­தர குடும்ப உறுப்­பி­ன­ராக அவர் காட்­சி­ய­ளிக்­கும் சுவ­ரொட்­டி­களை இப்­படக்­கு­ழு­வி­னர் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தாம் உடல் எடை­யைக் குறைத்து, இளைத்த ரக­சி­யத்தை வெளி­யிட்­டுள்­ளார் சிம்பு.

கடந்த 2019ஆம் ஆண்டு 'வந்தா ராஜா­வா­தான் வரு­வேன்' படத்­தில் நடித்­த­போது அவ­ரது உடல் எடை 105 கிலோ. அதன் பிறகு, கடும் உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொண்டு உடல் எடையை 70 கிலோ­வாக குறைத்­தார்.

இந்­நி­லை­யில், தமது உடல் எடைக் குறைப்­பின் ரக­சி­யத்தை காணொ­ளிப்­ப­திவு மூலம் அவர் பகிர்ந்­துள்­ளார். அதைக்­கண்ட ரசி­கர்­கள் பலர் அவ­ரது கடும் உழைப்பை பாராட்டி உள்­ள­னர்.

தனது பிறந்­த­நா­ளாக பிப்­ர­வரி 4ஆம் தேதி இந்­தக் காணொ­ளிப்­பதிவை வெளி­யிட்ட பின்­னர், தன்னை முன்­னு­தா­ர­ண­மா­கக் கொண்டு உடற்­ப­யிற்­சி­யில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று வலியுறுத்தி உள்­ளார்.

இதற்­கி­டையே, சிம்­புவுக்கு ஐக்கிய அமீரக சிற்றரசு 'கோல்­டன் விசா' அளித்­து கௌரவித்துள்­ளது.

இத­னால் அவ­ரது ரசி­கர்களும் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர். மிக விரை­வில் தன்­னு­டைய ரசி­கர்­களை நேரில் சந்­தித்­துப் பேச­வும் திட்­ட­மிட்­டுள்­ளார் சிம்பு. அதற்­கான ஏற்­பா­டு­கள் நடை பெற்று வரு­கின்­றன. அந்­தச் சந்­திப்­பின்­போது அவர் மனம் விட்­டுப் பேசு­வார் என்­றும் முக்­கிய அறி­விப்­பு­களை வெளி­யி­டு­வார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!