‘என் இசை என்னுடன் வரும்’

“மகிழ்ச்­சியை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்­கி­றோமோ, அதேபோல் சோகத்­தை­யும் ஏற்­கத்­தான் வேண்­டும்,” என்று அடிக்­கடி சொல்­வார் லதா மங்­கேஷ்­கர்.

இவ­ரது தீவிர ரசி­கர்­கள் இப்­போது அதைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

தனது குயில் குர­லால் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வை­யும் வசீ­க­ரித்த பாடகி இவர். கிட்­டத்­தட்ட இந்­தி­யா­வில் பெரும்­பான்­மை­யா­கப் பேசப்­படும் அனைத்து மொழி­க­ளி­லும் பாடி இருக்­கி­றார்.

எத்­தனை ஆயி­ரம் பாடல்­க­ளைப் பாடி­னார் என்ற கணக்கை அவர் வெளி­யி­ட­வில்லை. இவ­ரது தீவிர ரசி­கர்­க­ளா­லும் அதைக் கணக்­கிட முடி­ய­வில்லை.

இவர் இறந்து ஒருநாள் ஆன பிற­கும்­கூட, மொத்த பாடல்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்­துக்­கொண்டே போகிறது. நேற்று மாலை நாற்­ப­தா­யி­ரம் பாடல்­கள் என்று ஓர் ஊட­கம் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. அது இந்­நே­ரம் ஐம்­ப­தா­யி­ர­மாக மாறி­யி­ருக்­கக்­கூ­டும்.

தந்­தை­யி­டம் இசை கற்றவர்

92 வய­தில் தனது வாழ்க்­கைப் பய­ணத்தை முடித்­துக்­கொண்ட இந்­திய இசைக் குயி­லின் இசைப்­ப­ய­ணம் கடந்த 1929ஆம் ஆண்டு செப்­டம்­பர் 28ஆம் தேதி, மத்­தி­யப் பிர­தே­ச மாநி­லம் இந்­தூ­ரில் தொடங்­கி­யது.

பண்­டிட் தீனா­நாத் மங்­கேஷ்கர் - ஷெவந்தி தம்­ப­தி­ய­ரின் மக­ளா­கப் பிறந்­தார் லதா மங்­கேஷ்­கர். இவ­ரது இயற்­பெ­யர் ஹேமா.

தமது ஐந்­தா­வது வய­தில் தந்­தை­யி­டமே இசை கற்க ஆரம்­பித்­தார் லதா. தந்தை தீனா­நாத் பாட­கர் மட்­டு­மல்ல, சிறந்த நடி­க­ரும்­கூட.

இத­னால் தந்தை நடிக்­கும் இசை நாட­கங்­களில் மகள் லதா­வுக்­கும் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது. அதன் பின்­னர், அவ­ரது இசைப்­ப­ய­ணம் வேகம் எடுத்­தது. அமா­நத் கான், பண்­டிட் துள­சி­தாஸ் ஷர்மா, அமான் அலி கான் சாஹிப் எனப் பல­ரி­டம் பாரம்­ப­ரிய இசையை முறைப்­ப­டிக் கற்­றுத் தேர்ந்­தார்.

தந்தை கால­மா­னார்; இசை அரவணைத்­தது

பள்­ளிப் படிப்பை முடிக்­காத லதா, சிறு வய­தி­லேயே அந்­நா­ளில் மக்­க­ளின் அபி­மா­னம் பெற்ற பாட­கர் கே.எல்.சைக­லின் இசை­யால் ஈர்க்­கப்­பட்­டார். இவ­ரது கவ­னம் இசை­யில்­தான் முழு­மை­யாக குவிந்­தி­ருந்­தது. தம்­மால் இசைத்­து­றை­யில் சாதிக்க முடி­யும் என்று நினைத்­தார்.

ஆனால், காலம் இவ­ருக்கு எளி­தில் அனைத்­தும் தந்­து­வி­ட­வில்லை. அது வேறு கணக்கை வைத்­தி­ருந்­தது.

லதா­வுக்கு 13 வய­தான நிலை­யில், இவ­ரது தந்தை திடீ­ரெ­னக் கால­மா­னார். குடும்­பம் துக்­கத்­தில் தவித்­தது.

இந்­நி­லை­யில், ‘பஹிலி மங்­கலா கர்’ என்ற மராத்தி மொழித் திரைப்­படத்­தில் பாட­வும் நடிக்­க­வும் லதா­வுக்கு வாய்ப்பு கிடைத்­தது. அந்­தப் படத்­துக்­காக இந்­தி­யில் ‘மாதா ஏக் சபூத் கி துனியா’ என்று தொடங்­கும் தனது முதல் திரைப்­பா­டலை பாடி­னார்.

அதன் பிறகு பாடல்­க­ளின் எண்­ணிக்­கையை கணக்குப் பார்க்க அவ­ருக்கு நேரம் இல்லை. அவரை குறை­வா­கப் பாடச் சொல்ல திரை­யு­ல­கத்­தி­ன­ருக்­கும் ரசி­கர்­க­ளுக்­கும் விருப்­பம் இல்லை.

சுமார் 78 ஆண்­டு­கள் நீடித்த லதா மங்­கேஷ்­க­ரின் இசைப்­ப­ய­ணத்­தில் அவ­ரது சாத­னை­கள் வியக்க வைப்­பவை.

ரசி­கர்­களை இனிய குர­லால் கட்­டிப்­போட்டவர்

கடந்த 1948ஆம் ஆண்டு குலாம் ஹைதர் இசை­யில் வெளி­வந்த ‘மஜ்­பூர்’ திரைப்­ப­டம்­தான் அவ­ரது திரை­யிசை வாழ்க்­கை­யில் திருப்­பு­முனையை ஏற்­ப­டுத்­தி­யது.

பின்­னர் 1949இல் அசோக் குமார், மது­பாலா நடிப்­பில் வெளி­வந்து வெற்றி பெற்ற ‘மஹல்’ படத்­தில் அவர் பாடிய ‘ஆயேகா ஆயேகா’ என்ற பாடல் இவ­ருக்கு மிகப் பெரிய ரசி­கர் கூட்­டத்தை உரு­வாக்­கி­யது.

அதை­ய­டுத்து, ‘பர்­ஸாத்’, ‘தீதார்’, ‘பைஜு பாவ்ரா’, ‘அமர்’, ‘உரன் கட்­டோலா’, ‘ஸ்ரீ 420’, ‘தேவ்­தாஸ்’, ‘மதர் இந்­தியா’ என 1950களி­லும் 1960களி­லும் ரசி­கர்­களை தனது இனிய குர­லால் கட்­டிப்­போட்­டி­ருந்­தார் லதா.

பன்­மு­கங்­க­ள் கொண்ட கலை­ஞர்

நவ்­ஷத், ஷங்­கர் ஜெய்­கி­ஷன், சி.ராமச்­சந்­திரா, அனில் பிஸ்­வாஸ், ஹேமந்த் குமார், ரவி, சலீல் சௌத்ரி, எஸ் டி பர்­மன், ஆர் டி பர்­மன், மதன் மோகன், கல்­யா­ணஜி ஆனந்த்ஜி, ராகேஷ் ரோஷன், ஆனந்த் மிலிந்த், அனு­மா­லிக், இளை­ய­ராஜா, ஏ.ஆர்.ரஹ்­மான் என இந்­தி­யா­வின் தலை­சி­றந்த இசை­ய­மைப்­பா­ளர்­கள் அனை­வ­ரி­ட­மும் பணி­யாற்­றிய பெருமை மிக்­க­வர் லதா மங்­கேஷ்­கர்.

பாட­கி­யாக மட்­டு­மல்­லா­மல், திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர், இசை­ய­மைப்­பா­ளர் என திரைத்­து­றை­யில் பன்­மு­கங்­க­ளைக் கொண்­டி­ருந்­தார்.

‘ராம் ராம் பாவ்னே’, ‘மராத்தா டிட்­டுகா மெல்­வாவா’, ‘மொஹித்­யாஞ்சி மஞ்­சுளா’, ‘ஸாதி மான்ஸா’ போன்ற படங்­க­ளுக்கு அவர் இசை­ய­மைத்­துள்­ளார்.

நான்கு படங்­க­ளைத் தயா­ரித்­தும் உள்­ளார்.

கின்­னஸ் சாதனை

25 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட தனிப்­பா­ட­ல்களைப் பாடியவர் என்ற பெருமை லதா­வுக்கு உண்டு. அதி­க­மான பாடல்­க­ளைப் பாடிய பின்­ன­ணிப் பாடகி என்று கின்­னஸ் சாதனை புத்­த­கத்­தில் அவ­ரது பெயர் இடம்­பெற்­றுள்­ளது. 20 இந்­திய மொழி­களில் அவர் பாடி­யி­ருப்­ப­தாக மற்­றோர் ஊட­கச் செய்தி கூறு­கிறது. இத்­த­கைய சாத­னை­களை அங்­கீ­க­ரிக்­கும் வித­மாக, இந்­திய அரசு அவ­ருக்கு நாட்­டின் மிக உய­ரிய பாரத ரத்னா விருதை வழங்கி கௌ­ர­வித்­துள்­ளது.

தமிழ்த் திரை­யு­ல­கில் லதா

கடந்த 1950களில் சில இந்தி படங்­கள் தமி­ழில் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்­ட­போது அவற்­றில் தமி­ழில் பாடி உள்­ளார் லதா.

அதன் பின்­னர் 1980களில்­தான் மீண்­டும் அவர் தமிழ்த் திரை­யு­ல­குக்கு வந்­தார்.

1987ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்­திற்­காக லதாவை தமி­ழுக்கு அழைத்து வந்­தார் இளை­ய­ராஜா.

இந்­தப் படத்­தில் இடம்­பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடல்­தான் அவர் நேர­டி­யா­கப் பாடிய முதல் தமிழ்ப் படப் பாடல் என்று கூறப்­ப­டு­கிறது. .

1988ல் இளை­ய­ராஜா இசை­யில் கமல் ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்­தில் இடம்­பெற்ற ‘வளை­யோசை’ என்ற காலத்தை வென்ற பாடலை, காலஞ்­சென்ற எஸ்பி பால­சுப்­பி­ர­மணி­யத்­து­டன் இணைந்து பாடி­னார்.

அதே ஆண்டு ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்­தில் இடம்­பெற்­றி­ருந்த ‘எங்­கி­ருந்தோ அழைக்­கும்’ என்ற பாட­லை­யும் அவர் பாடி­யுள்­ளார்.

ஏ.ஆர். ரகு­மான் இசை­ய­மைத்த ‘புக்­கார்’, ‘ஸுபைடா’, ‘லகான்’, ‘ரங் தே பசந்தி’ உள்­ளிட்ட படங்­களில் லதா சில பாடல்­களை பாடி­னார்.

லதா மங்­கேஷ்­க­ரும் அவ­ரது சகோ­தர சகோ­த­ரி­களும் தமிழ்த் திரைப்­பட நடி­கர் சிவாஜி கணே­ச­னைத் தங்­கள் மூத்த சகோ­த­ர­ராக எண்ணி உற­வா­டி­னர் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த 1960-களில் தமது பல பாடல் ஒலிப்­ப­தி­வு­கள் சென்­னை­யில் இருந்­த­தா­க­வும் அப்­போ­தெல்­லாம் சிவாஜி கணே­ச­னின் இல்­லத்­தில்­ தாம் தங்­கி­ய­தா­க­வும் அவர் பேட்­டி­களில் நினை­வு­கூர்ந்­துள்­ளார்.

குயி­லோ­சை­யும் தேனி­சை­யும்

“இந்த உல­கில் கட­வு­ளின் கருணை இன்றி எது­வும் நிக­ழாது என உறு­தி­யாக நம்­பு­கி­றேன். அந்­தக் கரு­ணை­யால்­தான் நான் பாட­கி­யாக உள்­ளேன்.

“ஒரு நாளும் என்­னால் பாடு­வதை நிறுத்த இய­லாது. நான் இறந்­தால் என் இசை­யும் என்­னு­ட­னேயே வரும்,” என்று ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார் லதா.

லதா மங்­கேஷ்­க­ரின் குயி­லோ­சை­யும் தேனி­சை­யும் கோடிக்­கணக்­கான ரசி­கர்­க­ளு­டன் என்­றும் நிலைத்­தி­ருக்­கும் என்­பதை இவர் சொல்ல மறந்­தி­ருந்­தா­லும், நன்கு அறிந்­தி­ருப்­பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!